“கல்யாணம் பண்ணாத.. என் கூட உல்லாசமா இரு..” இளம் பெண்ணின் நிச்சயதார்த்தத்தை நிறுத்திய பிஸினஸ்மேன்..! கடைசியில் என்னாச்சு..?

Rape 2025

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள் பிரகாஷ். இவர் ஷேர் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது கம்பெனியில் கருமலைக்கூடலை சேர்ந்த 25 வயது பட்டதாரி இளம்பெண் வேலை செய்து வந்தார். ஏழை குடும்பத்தை சேர்ந்த அந்த பெண்ணை நான் சொல்வதை கேட்க வேண்டும் இல்லையென்றால் வேலையில் இருந்து நீக்கிவிடுவேன் என அருள் பிரகாஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது.


பலமுறை அந்த பெண்ணை மிரட்டி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்த நிலையில் கடந்த 10-ஆம் தேதி அந்த பெண்ணுக்கும் வேறு ஒருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை அறிந்த அருள் பிரகாஷ் அந்த பெண்ணுக்கு திருமணம் நடக்க கூடாது என்ற நோக்கத்தோடு அவரை மிரட்டி கட்டாயப்படுத்தி கடத்தி சென்றுள்ளார்.

அருள் பிரகாசுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இளம் பெண் மறுப்பு தெரிவித்து தன்னை விட்டு விடுமாறு கூறினார். உல்லாசமாக இருந்ததை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டிய அருள் பிரகாஷ் உறவினரான மகாலட்சுமி என்பவரது வீட்டில் அடைத்து வைத்துள்ளார். யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் அடைத்து வைக்கப்பட்ட இளம் பெண் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

அங்கிருந்த எறும்பு சாக்பீசை தின்று மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்து பெற்றோர் மருத்துவமனைக்கு சென்று மகளிடம் விசாரித்த போது தான் நடந்த விவரம் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அருள் பிரகாஷை கைது செய்தனர்.

Read more: “ஈகோ பிரச்சனை இருக்கு.. பொதுச் செயலாளரிடம் நேரடியாக முறையிட போறேன்..!!” – செல்லூர் ராஜு பளீச்

English Summary

The businessman who broke off the engagement of a young woman..! What happened in the end..?

Next Post

உங்கள் குடும்பத்துக்கு நிதி ரீதியாக பாதுகாப்பு தரும் மத்திய அரசின் இந்த திட்டங்கள் பற்றி தெரியுமா..?

Sun Nov 2 , 2025
Do you know about these central government schemes that provide financial security to your family?
small savings schemes

You May Like