விஜய் பிரச்சாரத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் தவெக வழக்கு தொடர்ந்துள்ளது.. இந்த வழக்கு கடந்த 18-ம் தேதி நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது தவெக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “ நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளையும், மற்ற கட்சிகளுக்கு இல்லாத நிபந்தனைகளை தவெகவுக்கு விதிப்பதாக கூறினார்..
கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வரக்கூடாது என்று நிபந்தனை விதிக்கிறார்கள். அவர்களை வர வேண்டாம் என்று நாங்கள் எப்படி சொல்ல முடியும் என்று வாதிட்டார்..
அப்போது குறுக்கிட்ட நீதிபதி இதுபோன்ற நிபந்தனைகள் அனைத்து கட்சிகளுக்கும் விதிக்கப்படுவது தானே என்று கேள்வி எழுப்பினார்.. முழுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டால், பொது மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா? யாரும் சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல.. பொதுக்கூட்டம் நடத்துபவர்களும் சட்டத்திற்கு உட்பட்டு தான் நடத்த வேண்டும்.. தலைவராக இருக்கும் நீங்கள் தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.. கர்ப்பிணி, மாற்றுத் திறனாளிகள் வர வேண்டும் என்று கூறி மற்றவர்களுக்கு நீங்கள் ஒரு முன்னுதாரணமாக இருக்கலாமே? பொதுச்சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்க வேண்டும்.. திருச்சியில் சேதப்படுத்தப்பட்ட பொது சொத்துக்களுக்கு இழப்பீடு வசூலிக்கப்பட்டதா? இல்லை என்றால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட நேரிடும் என்று நீதிபதி எச்சரித்தார்..
இதையடுத்து அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்க அறிவுறுத்திய நீதிபதி, பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தால், அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்கவும் காவதுறைக்கு உத்தரவிட்டார்.. மேலும் இந்த விதிமுறைகள் குறித்து காவல்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணை செப்டம்பர் 24 –ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்..
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுக்கூட்டம், பேரணிக்கு முன்பாகவே இழப்பீட்டுக்கான தொகையை முன்பணமாக வசூலிக்க சட்டத்தில் இடமில்லை என்று வாதிடப்பட்டது.. இதுதொடர்பான விதிமுறைகளை வகுக்க கூடுதல் கால அவகாசம் தேவை என்றும் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி மனமிருந்தால் அரசு இதை செய்யலாம்.. சேதம் ஏற்படும் பட்சத்தில் யாரிடம் அதை பற்றி கேட்பது? எனவே பேரணி பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் முன்பே குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும். பொதுக்கூட்டத்தின் போது அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை எனில் பணத்தை திருப்பி அளித்துவிடலாமே என்று தெரிவித்த நீதிபதி விதிகளை வகுப்பது தொடர்பாக அரசுக்கு அக்டோபர் 16-ம் தேதி வரை அவகாசம் வழங்கினார்.. மேலும் வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்தார்.
Read More : Breaking : வழக்கு குறித்து ஊடகங்களில் பேசக்கூடாது.. சீமான், விஜயலட்சுமிக்கு உச்சநீதிமன்றம் தடை..