பரபரப்பு..! தவெக மாநாட்டில் ரசிகரை பவுன்சர்கள் தாக்கிய வழக்கு வேறு காவல் நிலையத்திற்கு மாற்றம்…!

Vijay 2025 2

தவெக மாநாட்டில் ரசிகரை பவுன்சர்கள் தூக்கி வீசிய விவகாரத்தில் விஜய் உள்ளிட்டோர் மீது குன்னம் போலீசார் பதிவு செய்த வழக்கு மதுரை கூட கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.


தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் கடந்த 21-ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய்யை பார்க்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரை வந்தனர். இந்த மாநாட்டின் போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் ‘ரேம்ப் வாக்’ சென்றார். அப்போது விஜய்யின் பாதுகாப்பு கருதி, ‘ரேம்ப் வாக்’ மேடை அருகில் இருந்த தடுப்புகளில் கிரீஸ் தடவப்பட்டிருந்தது.

அதையும் மீறி தொண்டர்கள் சிலர் மேடையின் மீது ஏறியதால் விஜய்யின் பவுன்சர்கள் தொண்டர்களை அப்புறப்படுத்தினர். அந்த வகையில் சில தொண்டர்களை விஜய்யின் பவுன்சர்கள் மேடையில் இருந்து தூக்கி வீசும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டில் விஜய்யை அருகில் சென்று பார்க்க முயன்ற பெரம்பலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவரை பவுன்சர்கள் குண்டுக்கட்டாக தூக்கி கீழே வீசினர்.

இந்த நிலையில் தவெக. தொண்டர் சரத்குமார் மற்றும் அவரது தாயார் சந்தோசம் ஆகிய இருவரும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில் கூடுதல் எஸ்.பி.பாலமுருகனிடம் புகார் அளித்தனர். குன்னம் போலீஸ் நிலையத்திலும் அவர்கள் புகார் செய்தனர். குன்னம் போலீசார் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 346/25 யு.எஸ். 189(2), 296(b), 115(2) பி.என்.எஸ். பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், விஜய் மற்றும் பவுன்சர்கள் மீதான இந்த வழக்கு குன்னம் காவல் நிலையத்திலிருந்து மதுரை கூடக்கோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஜம்மு பேரழிவு!. பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு!. களத்தில் இறங்கிய இந்திய விமானப் படை!. 10,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்!.

Thu Aug 28 , 2025
கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் வைஷ்ணவ தேவி யாத்திரைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் என்று கூறப்படுகிறது. புதன்கிழமை மழை சற்று தணிந்தாலும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட ஆறுகளில் வெள்ளம் குறையத் தொடங்கியதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் […]
Jammu flood 11zon

You May Like