சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட ஹார்டு டிஸ்க்களில் டெண்டர், கொள்முதல் மற்றும் , நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய டிஸ்க்கள் திருப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
கடந்த மாதம் 16, 17 தேதிகளில் ஹார்டு டிஸ்க்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது..
இந்த நிலையில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. ராணிப்பேட்டையை சேர்ந்த கோபிநாத் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. இவர் 11 மாதங்களாக மின் துறை தலைமை அலுவலகத்தில் வேலைபார்த்து வந்துள்ளார்.. அவர் 11 மாதமாக வேவு பார்த்துக் கொண்டே ஹார்டு டிஸ்க்களை திருடி விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது..
ஹார்டு டிஸ்க்களை யாருக்கு விற்பனை செய்தார் என்பது தொடர்பாக கோபிநாத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.. மின் துறை அலுவலக்கத்தில் 20-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்களை திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் அவர் திருடிய ஹார்டு டிஸ்குகளை உண்மையிலேயே விற்பனை செய்துள்ளாரா அல்லது வேறு யாரிடமாவது கொடுத்திருக்கிறாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..



