மத்திய அரசு கொண்டு வந்த மசோதா… விவசாயிகள் கருத்து தெரிவிக்க இன்றே கடைசி நாள்…!

kharif season farmers 11zon

விதைகள் வரைவு மசோதா 2025-ஐ மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை தயாரித்துள்ளது. தற்போதைய விதைகள் சட்டம் 1966 மற்றும் விதைகள் (கட்டுப்பாடு) ஆணை 1983-க்கு மாற்றாக இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.


விதை மசோதா, 2025 வரைவு, சந்தையில் கிடைக்கும் விதைகள் மற்றும் நடவுப் பொருட்களின் தரத்தை ஒழுங்குபடுத்துதல், விவசாயிகள் குறைந்த விலையில் உயர்தர விதைகளைப் பெறுவதை உறுதி செய்தல், போலியான, தரமற்ற விதைகளின் விற்பனையைத் தடுத்தல், விவசாயிகளை இழப்புகளிலிருந்து பாதுகாத்தல், புதுமை கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல், உலகளாவிய விதை வகைகளுக்கான அணுகலை ஊக்குவித்தல், விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாத்தல், விதை விநியோக அமைப்புகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இம்மசோதா சிறிய குற்றங்களை குற்றமற்றதாகவும், எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவிக்கவும், விதிமுறைகளை மீறுவதற்கு கடும் நடவடிக்கை எடுக்கவும் வகை செய்கிறது. இம்மசோதா குறித்த கருத்துகளை சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் உறுப்பினர்கள் jsseeds-agri[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இன்று மாலைக்குள் அனுப்ப வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் 16 நாள் மட்டுமே வேலை...! குரல் கொடுத்த அன்புமணி ராமதாஸ்....!

Thu Dec 11 , 2025
திமுக அரசின் அலட்சியத்தால் தமிழ்நாட்டு மக்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பாதிக்கப்படக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 12 கோடி வேலைநாள்கள் முடிவடைந்து விட்ட நிலையில், இனி யாருக்கும் வேலை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 150 நாள்கள் வேலை […]
100 days job 2025

You May Like