நடப்பு ஆண்டிற்கான சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த மீண்டும் ஒரு மாதம் நீட்டிப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
2022-23ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி பொது சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் ஆக்டோபர் 1-ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது.
தாமதமாக சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்த வேண்டும். எனினும் சொத்துவரி பொது சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியினை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி மதிப்பீட்டிற்குரிய உயர்த்தப்பட்ட சொத்துவரியினை தனிவட்டி இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும் சொத்துவரி ரசீதுகளில் உள்ள QR Code பயன்படுத்தியும், பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலமாக, எவ்வித பரிமாற்ற கட்டணமில்லாமலும் செலுத்தலாம்.