பெற்ற மகளை கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய கொடூர தாய்.. வாக்குமூலத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்..!

Prostitution 2025 1

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி சித்ரா(42). 12 வருடங்களுக்கு முன்பு ஏழுமலை இறந்த தலையில் இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். மூத்த மகளுக்கு திருமணம் ஆன நிலையில் இளைய மகள்(18) மட்டும் தாயுடன் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில், சித்ராவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான கந்தன்(31) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது.


இதனிடையே கடந்த 13ம் தேதி இரவு, வீட்டில் இருந்த சித்ராவும், அவரது இளைய மகளும் காணாமல் போய்விட்டனர். இதனால் பதறிப்போன மூத்த மகள், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். சித்ராவின் செல்போன் நம்பரை வைத்து ஆய்வு செய்த போது, அவர்கள் கேரள மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் கேரளாவுக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு தேயிலை தோட்ட பகுதியில் தாய், மகள் மற்றும் கந்தன் மூவரும் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து விசாரித்த போது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.

இளம் பெண் அளித்த வாக்குமூலத்தில், “என் வாயில் துணி வைத்து, என் அம்மாவும் கந்தனும் சேர்ந்து என்னை கடத்தி கொண்டு போய்விட்டார்கள். அங்கு கந்தன் எனக்கு கட்டாயமாக தாலி கட்டி, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டான். இதற்கு என் அம்மா சித்ராவும் உடந்தையாக இருந்தார்” என்று கூறி கதறி அழுதுள்ளார்..

இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் சித்ரா மற்றும் கந்தனை கைது செய்தனர். மீட்கப்பட்ட இளம்பெண் பாதுகாப்பாக அவரது மூத்த சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டார். பெற்ற மகளை தாயே கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more: 2026இல் கடக ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்..!! ஆனால் இந்த பிரச்சனையில் மட்டும் சிக்கிடாதீங்க..!!

English Summary

The cruel mother who made her daughter a prey to a murderer.. The police went crazy after hearing her confession..!

Next Post

அடுத்த பெருந்தொற்றாக உருவெடுக்கிறதா பறவைக் காய்ச்சல்..? நாமக்கல்லை வைத்து இந்திய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய திக் திக் ஆய்வு..!!

Fri Dec 19 , 2025
கடந்த 2020-ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்றை யாராலும் மறக்க முடியாது. அந்த வடுக்கள் மறைவதற்குள், ‘பறவைக் காய்ச்சல்’ (H5N1) எனப்படும் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், மனிதர்களிடையே அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, இந்தியாவின் ‘முட்டை நகரம்’ என்று அழைக்கப்படும் நாமக்கல் மாவட்டத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஒரு புதிய ஆய்வு, எதிர்காலப் பெருந்தொற்றைத் தடுப்பதற்கான முக்கியத் தரவுகளை வழங்கியுள்ளது. […]
Bird Flu 2025

You May Like