கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோணங்காடு பகுதியை சேர்ந்த கொத்தனாருக்கு 17 வயதில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார். மனைவி பிரிந்த நிலையில் மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இதனிடையே ப்ளஸ்-2 படிக்கும் இவரின் மகள் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த கொத்தனார் மகளை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் வேலை காரணமாக கொத்தனார் கேரளாவிற்கு சென்றுள்ளார். அப்போது மகள் தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். நேற்றைய தினம் கொத்தனார் வீடு திரும்பிய போது வீடு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவை திறக்காததால் ஆத்திரமடைந்த அவர், வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து மகளின் காதல் லீலைகளை கூறி கலங்கி உள்ளார்.
அங்கு வந்த பொதுமக்கள் வீட்டை சுற்றி வளைத்து இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து காதலனிடம் விசாரணை நடத்திய போது அவர் குளச்சல் அருகே உள்ள கொத்தனார்விளையை சேர்ந்தவர் என்பதும் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. அத்துடன் விடுமுறை நாட்களில் குளச்சல் துறைமுகத்தில் வேலைக்கு சென்று வந்தார்.
இதையடுத்து இருவரையும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். தொடர்ந்து மாணவனின் செயலை பெற்றோரிடம் கூறி அவரை கண்டித்து அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read more: ஆயுளை நீட்டிக்கும் ஜப்பான் டெக்னிக்..!! 6-6-6 நடைபயிற்சி முறையின் ஆரோக்கிய பலன்கள்..!!



