அரசு வேலைவாய்ப்பு நோக்கில் எந்தெந்த படிப்புகள் இணையானவை என உயர்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
எம்பிஏ ஓட்டல் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பானது தமிழக அரசின் சுற்றுலா அலுவலர் பதவிக்கான கல்வி தகுதிகளில் ஒன்றாக நிர்ணயிக்கப்பட்ட சுற்றுலா பாடத்துடன் கூடிய முதுகலை படிப்புக்கு சமமாக கருதப்படும். அதேபோல, சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம். (அக்கவுன்ட்டிங் & ஃபைனான்ஸ்) படிப்பு, பி.காம். (பொது) பட்டப் படிப்புக்கு சமமானது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக உயர்கல்வி துறை செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில்; மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பிபிஇ (பேச்சிலர் ஆப் பிசினஸ் எகனாமிக்ஸ்) படிப்பு வேலைவாய்ப்பு நோக்கில் பிஏ (பொருளாதாரம்) படிப்புக்கு இணையானது. அதேபோல, சென்னை பல்கலைக்கழகம் வழங்கும் பி.காம். (அக்கவுன்ட்டிங் & ஃபைனான்ஸ்) படிப்பு, பி.காம். (பொது) பட்டப் படிப்புக்கு சமமானது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் சுற்றுலா மேலாண்மை முதுகலை டிப்ளமா படிப்பு, சுற்றுலா மேலாண்மை டிப்ளமா படிப்புக்கு இணையானது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் எம்பிஏ ஓட்டல் மற்றும் சுற்றுலா மேலாண்மை படிப்பானது தமிழக அரசின் சுற்றுலா அலுவலர் பதவிக்கான கல்வி தகுதிகளில் ஒன்றாக நிர்ணயிக்கப்பட்ட சுற்றுலா பாடத்துடன் கூடிய முதுகலை படிப்புக்கு சமமாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: சினிமா பாணியில் சேஸிங்.. மணல் கடத்தல் லாரியை மடக்கி பிடித்த முன்னாள் அமைச்சர்..!!