திமுக அரசின் அலட்சியமே காரணம்.. பள்ளி மாணவன் இறப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.. நயினார் நாகேந்திரன் சாடல்..

nainar nagendran mk Stalin 2025

சென்னை திருவொற்றியூரில் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் உயிரிழந்ததற்கு ஆளும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தனது சமூகவலை தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ சென்னை திருவொற்றியூர் பகுதியில் தேங்கிக் கிடந்த மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 17 வயது பள்ளி மாணவன் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. உயிரிழந்த அம்மாணவனின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் பகுதியில் ஏற்கனவே இரண்டு பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ளதாகக் கூறும் நிலையில், மின் கசிவை சரி செய்வதில் திமுக அரசு காட்டிய அலட்சியத்தின் விளைவாகவே ஒரு அப்பாவி சிறுவன் பலியாகியுள்ளான். ஒருநாள் மழைக்கே நீர் தேங்குமளவிற்கான உட்கட்டமைப்பு வசதிகளையும், பல நாள் புகாரளித்தும் ஒரு சிறு மின்கசிவைக் கூட சீர்படுத்த முடியாத நிர்வாகத்தையும் வைத்துக் கொண்டு “நாடு போற்றும் நல்லாட்சி” என திமுகவினர் விளம்பரப்படுத்திக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.

எனவே, மாணவனின் மரணத்திற்கு ஆளும் அரசு முழுப் பொறுப்பேற்றுக் கொண்டு, அம்மாணவனின் குடும்பத்தாருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட்டு தொகையாக அறிவிப்பதுடன், சென்னை மாநகரில் முறையான மழைநீர் வடிகால் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என மாண்புமிகு முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : அஜித் கொலை வழக்கு.. டிஜிபிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்.. 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவு..

RUPA

Next Post

31 பந்துகளில் 86 ரன்கள்.. யு-19 போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி..!!

Thu Jul 3 , 2025
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் யு-19 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபார சாதனை படைத்துள்ளார். 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் மோதிக்கொண்டுள்ளன. இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. மழையின் காரணமாக இந்தப் போட்டி 40 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 40 ஓவர்களில் 268 […]
Vaibhav Suryavanshi

You May Like