தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் நோக்கில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி, டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவு பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மாவட்டமாக வாரியாக வாக்காளர் பெயர் நீக்க விவரங்கள் வெளியாகி வருகிறது. அதன் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் 6,50,590 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். 1,19,489 பேர் இறந்த வாக்காளர்களாகவும், முகவரி இல்லாதவர்கள் 1,08,360, குடிபெயர்ந்தோர் 3,99,159 பேர், இரட்டைப் பதிவுகள் 23,202 பேர் என மொத்தம் 6,50,590 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டத்தில் 79,690 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரத்தில் 2.74 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் SIR பணிகளுக்கு பிறகு 2,06,503 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் 1.83 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 3.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,15, 025 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இறந்த வாக்காளர்கள், முகவரியில் இல்லாதவர்கள், குடிபெயர்ந்தோர், இரட்டை வாக்காளர்கள் உள்ளிட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கலங்க வைக்கும் சோகப் பின்னணி..!



