சமீபகாலமாக ஆன்லைன் டேட்டிங் தளங்கள் மூலம் மோசடி அதிகரித்து வருகிறது. இந்த ‘டேட்டிங் மோசடி’ ஒரு குறிப்பிட்ட திட்டமிடலுடன் அரங்கேறி வருகிறது. டேட்டிங் செயலிகளில் போலியான கவர்ச்சிகரமான சுயவிவரங்களை உருவாக்கும் இந்தப் பெண்கள், ஆண்களுடன் நட்பாகப் பழகி, அவர்களை நேரில் சந்திக்கத் அழைக்கிறார்கள்.. அதன் பின்னர் வழிப்பறியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
அந்த வகையில் சென்னையில் 23 வயது இளைஞனுக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாப்பூரை சேர்ந்த 23 வயது இளைஞனுக்கு டேட்டிங் செயலி மூலம் ஒரு பெண் அறிமுகமாகியுள்ளார். இருவரும் நீண்ட நாட்களாக செல்போனில் பேசி வந்த நிலையில், இன்ப பரிசு காத்துக்கொண்டிருக்கிறது எனக் கூறி அந்த பெண் இளைஞனை தனியாக சந்திக்க அழைத்துள்ளார்.
பெண் கூறிய இடத்திற்கு நள்ளிரவு 12 மணிக்கு மேல் அந்த இளைஞன் சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த 2 பேர் அவரை கழிவறைக்கு இழுத்துச் சென்று கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். தனது கையில் பணம் இல்லாததால் கபிலன் கூகுள் 1500 ரூபாய் பணத்தை அவர்களுக்கு அனுப்பியுள்ளார். இருப்பினும் விடாமல் அவர்கள் நிர்வாணமாக கபிலனை வீடியோ எடுத்து இதை யாரிடம் ஆவது கூறினால் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிடுவோம் என மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து கபிலன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சூர்யா, அஜய் என்ற இரண்டு பேரை கைது செய்தனர். அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவம், ஆன்லைன் டேட்டிங் தளங்களின் நம்பகத்தன்மை மற்றும் சமூக ஊடகப் பயன்பாடுகளில் தனிப்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றைச் சுற்றியுள்ள கேள்விகளை எழுப்புகிறது. டேட்டிங் செயலிகளில் அறிமுகமாகும் நபர்களுடன் சந்திக்கும்போது, மக்கள் தங்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, எச்சரிக்கையுடன் செயல்படுவது மிகவும் முக்கியம்.
Read more: பீகார் வரைவு வாக்காளர் பட்டியல்.. 5 நாளில் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும்…! இந்திய தேர்தல் ஆணையம்