“குட் நியூஸ்” தமிழகத்தில் மின் கட்டணம் 10 % குறைப்பு…! அரசு சூப்பர் அறிவிப்பு…! முழு விவரம் இதோ…

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2022-2023ஆம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் செப்.10ஆம் தேதி முதல் மின்கட்டண ஆணை நடைமுறைக்கு வந்தது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதால், ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கியப் பங்காற்றுவதை கருத்தில்கொண்டு அவர்களின் கோரிக்கையினை ஏற்று குறைந்தழுத்த மின் இணைப்பு (Low Tension III-B) கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கலாம் என முடிவு செய்து உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

Vignesh

Next Post

கவனம்...! 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு...! இதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்...! அரசு மாற்றம் செய்து உத்தரவு...!

Thu Nov 10 , 2022
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மாெழியை மட்டுமே மொழிப்பாடமாக தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்கப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடித்தத்தில்; 2022-23 ம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பதற்கு EMIS-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மாணவரின் பெயர் (தமிழ் […]

You May Like