கேரள மாநிலம் கண்ணூர் அருகே 15 வயது சிறுமி மீது மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலத்தில் பள்ளி மாணவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதன் மூலம் அவர்களது படிப்பு, வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் தவறானவர்களுடன் ஏற்படும் நட்பு பெரும் விபரீதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஒரு சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.
கேரள கண்ணூர் பகுதியில் வசிக்கும் சங்கீத் (20) என்ற இளைஞன் இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுமியுடன் பழகியுள்ளார். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியதால், இருவரும் செல்போன் எண்களை பரிமாறி அடிக்கடி தொடர்பில் இருந்தனர். பின்னர் நெருங்கிய உறவாகி, சங்கீத் சிறுமியை ஆசை வார்த்தைகளால் கண்ணூரில் உள்ள ஒரு விடுதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.
அங்கு சங்கீத், தனது நண்பர்கள் அபிஷேக் (20), ஆகாஷ் (20) ஆகியோருடன் வந்துள்ளார். சிறுமிக்கு குளிர்பானம் கொடுத்த அவர், அதில் மயக்கமருந்து கலந்து வைத்திருந்தார். உண்மையை அறியாத சிறுமி குளிர்பானத்தை குடித்ததும் மயக்கம் அடைந்தார். இதையடுத்து சங்கீத் உள்ளிட்ட மூவரும் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் கூறவே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சம்பந்தப்பட்ட சங்கீத், அபிஷேக், ஆகாஷ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
Read more: “தம்பி மேல தான் எல்லாருக்கும் பாசம்.. அதான் அவன கொன்னுட்டேன்..!!” சின்ன பையன் செய்த பகீர் சம்பவம்..!