இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது…!

trade 2025

இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

இந்திய-ஐரோப்பிய தடையற்ற வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் 2024-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி புதுதில்லியில் கையெழுத்தாகியது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தம் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் உதவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


பதினான்கு அத்தியாயங்களைக் கொண்ட இந்த ஒப்பந்தத்தில் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகள், வர்த்தக வசதிகள், பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடம் தொடர்பான விதிமுறைகள், வர்த்தக நடைமுறைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கான தீர்வுகள், வர்த்தக ரீதியிலான தொழில்நுட்ப தடைகள், முதலீடுகளுக்கான ஊக்குவிப்பு நடவடிக்கைகள், சேவைகளுக்கான சந்தை வாய்ப்புகள், அறிவுசார் சொத்துரிமை, வர்த்தகம் மற்றும் நீடித்த வளர்ச்சி, இதர சட்டப்பூர்வ மற்றும் அது தொடர்பான நடைமுறைகள் குறித்த அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த ஒப்பந்தம் 100 சதவீதம் விவசாயம் சாராத பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளை உள்ளடக்கிய வகையில் அமைந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட வேளாண் விலைப் பொருட்களுக்கான வரி விகிதங்களில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. மருந்து உற்பத்தி, மருத்துவ சாதனங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு போன்ற பல்வேறு துறைகளில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை தொடர்பான சலுகைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சரக்கு மற்றும் சேவைகள் தொடர்பான வர்த்தகங்களுக்கு அப்பால் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான அந்நிய நேரடி முதலீடுகளை அடுத்த பதினைந்து ஆண்டுகளில் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வது மற்றும் இந்தியாவில் 10 லட்சம் நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான நடவடிக்கைகள் போன்ற அம்சங்களும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உயிர் பிழைத்த ரேவதி.. காதலை சொன்ன கார்த்திக்.. சதி திட்டம் தீட்டும் மாயா..!! கார்த்திகை தீபம் அப்டேட்..

Wed Oct 1 , 2025
Revathi survived.. Karthik confessed his love.. Maya hatches a conspiracy..!! Karthikai Deepam Update..
karthigai deepam 2

You May Like