தகவல் கிடைத்த 21 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீட்டுத்தொகை…!

farmers1

பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்உரிய நேரத்தில் காப்பீட்டுத் தொகை அளிக்கப்படுவதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமிருந்து மகசூல் செய்யப்பட்ட விவரங்கள் குறித்த தகவல்கள் கிடைத்த 21 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் காப்பீட்டுத்தொகை செலுத்தப்படுகிறது.


கடந்த 2022-23-ம் ஆண்டு முதல் 2024-25-ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்தமிழ்நாட்டில் மொத்தம்  1,69,61,521 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது. மொத்தம் ரூ.2,417.43 கோடி உரிமை கோரல்கள் கணக்கிடப்பட்டதாகவும் அதில் 2,359.28 கோடி உரிமை கோரல்களுக்கு காப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். உரிமை கோரலின் நிலுவைத் தொகையாக ரூ.58.14 கோடி இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறை பகுதிகளில் உள்ள விவசாயிகள் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளிலுள்ள இளைஞர்களுக்கு, ஊரகப் பகுதி இளைஞர்களுக்கான பயிற்சித் திட்டத்தின் கீழ் குறுகிய கால திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. 2015-16-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் உட்பட 86,000-க்கும் அதிகமான ஊரகப் பகுதி இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளதாகக் கூறினார். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டு முதல் 2024-25-ம் ஆண்டு வரை 9 திறன் பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டதாகவும் இதன் மூலம் 220 விவசாயிகள் பயனடைந்ததாகவும் அவர் கூறினார். இம்மாவட்டத்தில் ஊரக பகுதி இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2021-22-ம் ஆண்டில் 56 பேருக்கும் 2022-23-ம் ஆண்டில் 28 பேருக்கும், 2023-24-ம் ஆண்டில் 28 பேருக்கும், 2024-25-ம் ஆண்டில் 56 பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில், 2024-25-ம் ஆண்டில் 1,333 பேர் இத்திட்டத்தின் மூலம் பயிற்சிப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உங்கள் மரணத்தை துல்லியமாக சொல்லும் அதிசய கோயில்..!! தமிழ்நாட்டில் எங்கிருக்கு தெரியுமா..?

Wed Dec 17 , 2025
உங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மட்டுமல்லாமல், உங்களுக்கு எப்போது, எப்படி மரணம் நிகழும் என்பதைக் கூட துல்லியமாக சொல்லும் ஒரு கோவில் நம் தமிழ்நாட்டில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அது வேறு எந்த கோவிலும் இல்லை, உலகப் புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோவில் தான். பொதுவாக வைத்தீஸ்வரன் கோவில் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது அதன் பிரசித்தி பெற்ற நாடி ஜோதிடம் தான். இன்று வாழும் ஒரு மனிதனின் […]
temple 3

You May Like