அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் திமுகவில் இணைவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில், அதிமுகவின் முக்கிய இஸ்லாமிய முகங்களில் ஒருவரான அன்வர் ராஜாவும், மைத்ரேயனும் திமுகவில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சில தினங்களுக்கு முன்பு ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த நிலையில், எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர்களின் இந்த அரசியல் நகர்வு, அக்கட்சியினரிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்நிலையில், அதிமுகவின் மற்றொரு முக்கிய புள்ளி விரைவில் திமுகவில் சேர வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தகவலின்படி, அந்த தலைவர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கு எதிராக சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜகவுடன் அதிமுக வைத்த கூட்டணியில் இவர் திருப்தியில்லாதவராக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 5,000 பேருடன் அவர் திமுகவில் இணையத் தயாராகி வருவதாகவும், இதற்கான இணைப்பு விழா விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. ஒரு முக்கிய பிரமுகரின் விலகல் அதிமுகவின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிமுகவுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படலாம்.
Read more: பரபரப்பு…! சேலத்தில் அன்புமணி ஆதரவு பாமக நிர்வாகிகள் 7 பேர் அதிரடி கைது…!



