இன்று பூமியை கடக்க உள்ள 99 அடி அளவுள்ள மிகப்பெரிய விண்கல்.. பூமிக்கு ஆபத்தா..?

பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஒரு விண்கல் அல்லது சிறு கோள் என்பது சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம். சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. விண்கற்கல் பொதுவாக சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. சிலசமயங்களில் விண்கற்களின் அளவை பொறுத்து அவை பூமியை கடந்து சென்றால் அல்லது மோதினால் ஆபத்தானதாக இருக்கலாம்..

asteroid

எனவே, இந்த அச்சுறுத்தல்களை சரியான நேரத்தில் சமாளிக்க, நாசா விண்கற்களின் இயக்கங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்த வகையில் 99 அடி உயரமுள்ள ஒரு பிரம்மாண்டமான விண்கல், இன்று (பிப்ரவரி 25, 2023)பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வராது என்பதால் பூமிக்கு எந்த பெரிய அச்சுறுத்தலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 2023 CG1 எனப்படும் அந்த விண்கல், தற்போது பூமியை நோக்கி நகர்கிறது மற்றும் இன்று கிரகத்தை நெருங்குகிறது.

இந்த விண்கல் கிட்டத்தட்ட ஒரு விமானத்தின் அளவு கொண்டது.. இது மணிக்கு 23,328 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது, மேலும் 5,820,000 கிலோமீட்டர் தொலைவில் பூமிக்கு மிக அருகில் வரும் என்று நாசா தெரிவித்துள்ளது. அதே போல், 2023 DK என்று பெயரிடப்பட்ட மற்றொரு விண்கல் இன்று பூமியை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 28-அடி நீளமுள்ள இந்த சிறுகோள், ஒரு பேருந்தின் அளவைப் போன்றது என்றும், அது 2,520,000 கிலோமீட்டர் தொலைவில் பூமியை நெருங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

RUPA

Next Post

சென்னையில் பைனான்சியர் அடித்து கொலை…..! காரணம் என்ன…..?

Sat Feb 25 , 2023
சென்னை கோயம்பேடு அடுத்துள்ள நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (48) இவர் சினிமா பைனான்சியராக இருந்தவர் இவருடைய வீட்டில் ஒருவரை அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்து வந்ததாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களை தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது வீட்டில் இருந்தவர்கள் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு, வீட்டின் அறையில் மற்றும் ரத்த கரைகள் இருந்ததாக சொல்லப்படுகின்றது. மேலும் காவல்துறையினர் வீட்டில் இருந்த நபர்களை தீவிரமாக […]
murder

You May Like