தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வந்தவர் பாரதிராஜா.. 1977-ம் ஆண்டு வெளியான 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.. ஸ்டுடியோக்ளில் முடங்கிக் கிடந்த திரைப்படங்களை எதார்த்தமான வாழ்க்கையை வெள்ளித்திரைக்குக் கொண்டுவந்ததன் மூலம் தமிழ் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் பார்திராஜா..
இயக்குநர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை உள்ளிட்ட காலத்தால் அழியாத பல படைப்புகளை வழங்கி உள்ளார்.. 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக விளங்கிய பாரதிராஜா தனது படங்களுக்காக 6 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்..
இந்த சூழலில் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.. அவரின் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று பாரதிராஜாவின் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.. அவரது உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.. மேலும் திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் பாரதிராஜாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது சொந்த ஊரான தேனியில் இன்று வைக்கப்பட்டது.. வத்தலகுண்டு காட்ரோடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜா உடலுக்கு திரைத்துறையினர், உறவினர்கள், ரசிகர்கள், சொந்த ஊர் மக்கள் என என ஆயிரக்கணக்கானோ திரண்டு அஞ்சலி செலுத்தி வந்தனர்..
பாரதிராஜாவின் மறைவால் துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்தனர்.. கவிஞர் வைரமுத்து, சீமான், நடிகை ராதிகா, வடிவேலு, நிரோஷா, பாக்கியராஜ், பார்த்திபன், வெற்றிமாறன் என பல பல பிரபலங்களும் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.. அவரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், வன்னி அரசு ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்..
பின்னர் குடும்பத்தினர், உறவினர்கள் பாரதிராஜாவின் உடலுக்கு இறுதிச்சடங்குகளை செய்தனர்.. சொந்த ஊர் மக்கள், ரசிகர்கள். திரைப்பிரலங்கள், உறவினர்கள், குடும்பத்தினர் திரண்டிருந்தனர்..
இதை தொடர்ந்து முழு அரசு மரியாதை உடன் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.. காவல்துறை அணிவகுத்து நின்று, 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை வழங்கப்பட்டது.. பின்னர் பாரதிராஜாவின் உடன் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது..
தனது அனைத்து படங்களிலும் கரகர குரலில் ‘என் இனிய தமிழ் மக்களே.. உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்..’ என்று பேசி, தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்த பாரதிராஜா இன்று இந்த உலகில் இருந்து விடைபெற்றார்.. ஆனால் பாரதிராஜாவின் காலத்தால் அழியாத கிளாசிக் திரைப்படங்கள் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..
Read More : பிச்சைக்காரர் என நினைத்து ரஜினிகாந்திற்கு ரூ.10 கொடுத்த பெண்..! சூப்பர் ஸ்டாரின் ரியாக்ஷன் இதுதான்..!



