தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி..!! உடனே உத்தரவு போட்ட எடப்பாடி பழனிசாமி..!!

ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டு கொள்ளை முயற்சி நடைபெற்றது. அப்போது, எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். எஸ்டேட்டில் இருந்த சில ஆவணங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு கொள்ளை கும்பல் தப்பியது. இந்த வழக்கில் ஆதாரங்களை அழித்ததாக, கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பான சில விவரங்கள் தெரிந்திருந்தும், அதனை மறைத்ததாக கூறி தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். அவர்கள் 2 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இந்நிலையில், ஜாமீனில் வெளிவந்த கனகராஜின் சகோதரர் தனபால், “எனது தம்பி கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடமும், அதிமுக முன்னாள் அமைச்சர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

இதனால், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தற்போது சூடிபிடித்துள்ளது. மற்றொரு பக்கம் தேமுதிகவில் இருந்து விலகி மாவட்ட குழு உறுப்பினர், சேலம் மாவட்ட துணை செயலாளர் கமலா கருப்பண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அதேபோல், ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருந்த சிலரும் மன்னிப்பு கடிதம் கொடுத்து, மீண்டும் அதிமுகவில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்கிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பணிகளை உடனே செய்ய அறிவுறுத்தினார்.

Chella

Next Post

’தனுஷ் என்னோட பையன்’..!! தனது தாயிடம் கதறி அழுத வில்லன் நடிகர் ரகுவரன்..!!

Fri Sep 8 , 2023
வில்லன், ஹீரோ, குணசித்திரம் என எந்த ரோல் கொடுத்தாலும் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை வியக்க செய்தவர் நடிகர் ரகுவரன். இவர், கேரள மாநிலம் கொல்லங்கோடு என்ற இடத்தில் பிறந்து தந்தையின் தொழிலுக்காக தமிழ்நாட்டில் குடும்பத்தோடு குடிபெயர்ந்தார். இவர், 1982ஆம் ஆண்டு ஏழாவது மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். அதை தொடர்ந்து கூட்டுப்புழுக்கள், கை நாட்டு, மைக்கேல் ராஜ் ஆகிய படங்களில் கதாநாயகனாக […]

You May Like