அடுத்த முறை அமித்ஷா தமிழகம் வந்தால் அதிமுக இரண்டாக பிரியும் என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நேற்று திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “ திமுகவை அழிக்க நினைத்தவர்கள் வாழ்ந்ததாக சரித்தரம் இல்லை.. சிலர் திமுகவின் வரலாறு தெரியாமல் பேசுகின்றனர்.. கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு பிரதமர் மோடி 8 முறை தமிழ்நாட்டிற்கு வந்தார்.. திமுக கூட்டணி 40 இடங்களிலும் மாபெரும் வெற்றி பெற்றது..
அதே போல் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து செல்கிறார்.. முதல் முறை அமித்ஷா வந்த போது பாமவில் மோதல் வெடித்தது.. பிரிக்கவே முடியாமல் இருந்த அப்பா மகன் இடையே பிரிவு வந்தது..
2-வது முறை அமித்ஷா வந்த போது மதுரையில் ரூ.200 கோடி காணாமல் போனது.. அடுத்த முறை அமித்ஷா தமிழகம் வந்தால் அதிமுக இரண்டாக பிரியும்.. வேலுமணி கோஷ்டி, எடப்பாடி கோஷ்டி என பிரிகிறதா இல்லையா என்று பாருங்கள்.. இப்போதே அதற்கான வேலை தொடங்கிவிட்டது.. கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறுகிறார்.. தனித்த ஆட்சி என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.. அதிமுகவை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் வேட்பாளர் என்று அமித்ஷா கூறுகிறார்.. நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.. எனவே விரைவில் அதிமுக இரண்டாக உடையும்..” என்று தெரிவித்தார்..
Read More : மானமுள்ள காங்கிரஸ் கட்சி இனியாவது திமுக கூட்டணியில் வெளியேற தயாரா? காமராஜர் சர்ச்சை.. அண்ணாமலை சவால்..