2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. குறிப்பாக விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. கரூர் சம்பவத்தால் முடங்கிய தவெக இப்போது மீண்டும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளது. குறிப்பாக சமீப காலமாகவே விஜய் கட்சியில் முக்கிய தலைவர்கள் பலரும் இணைந்த வண்ணம் உள்ளனர்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், திடீரென தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெகவில் இணைந்த அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் போன்ற முக்கியப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைந்த அவர் தனது அடுத்த கட்ட நடவடிக்கையான கூட்டணி பேச்சு வார்த்தையை கையில் எடுத்துள்ளார்.
செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த கையோடு நேற்று முன்தினம் நாஞ்சில் விஜயன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார். இவர்கள் இருவருக்குமே முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர்த்து அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் விஜய் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் கசிந்து கொண்டிருக்கிறது.
முன்னதாக சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுக அமைச்சர்கள் இருவர் தவெகவில் இணையவுள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். அவர் கூறுகையில், “அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமல்ல, திமுகவில் உள்ள சிட்டிங் அமைச்சர்கள் இருவரும் எங்கள் கட்சி பக்கம் வருவார்கள். மக்கள் சக்தி எங்கு இருக்கிறதோ, அங்கே அரசியல்வாதிகளும், அமைச்சர்களும் வருவார்கள். பிப்ரவரி மாதத்தில் இந்த முக்கிய இணைப்பு நடக்கும். நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்” என்று சவால்விடும் தொனியில் கூறியிருந்தார்.
இதனிடையே அவர்களில் ஒருவர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆக இருக்கலாமோ என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே தேர்தலில் அவருக்கு சீட் கிடைப்பது டவுட் என பேசப்படுகிறது. இதனை ஸ்மெல் செய்தே, தமிழக வெற்றி கழகம் அவரை அணுகக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Read more: ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. 5 மடங்கு உயர்ந்த விமான டிக்கெட்டால் பயணிகள் அவதி..!!



