2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை பிரதான கட்சிகள் தொடங்கிவிட்டன.. அந்த வகையில் நேற்று அதிமுக – பாஜக இடையே கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.. தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்..
இதையடுத்து அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எண்ணிக்கை குறித்து தகவல் கசிந்தது.. அதில் பாஜகவுக்கு 23, பாமகவுக்கு 23., தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது..
இந்த நிலையில் இதுகுறித்து பிரேமலதா ஆவேசமாக பேசியுள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 6 சீட் கொடுப்பதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா மறுப்பு தெரிவித்துள்ளார். கூட்டணியை பற்றி மாநாட்டுக்கு வரும் போது தெரிவிப்போம்.. எங்கள் நிலைப்பாடு என்ன? என்ன முடிவு எடுக்கப் போகிறோம் என்பதை மாநாடு முடிந்த பிறகு தான் தெரிவிப்போம்.. மாநாட்டில் எங்கள் கட்சி மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரிடமும் கலந்தாலோசனை செய்த பின்னர் தான் எங்கள் முடிவை அறிவிப்போம்..
எந்த கட்சி அந்த அறிவிப்பு வந்ததோ இதுவே அந்த கட்சிக்கு அழிவு காலத்தை உருவாக்கும்.. இதை அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா? அல்லது பாஜக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா? சும்மா எதையும் பேசக்கூடாது.. இது கட்சி.. கோடிக்கணக்கான பேர் இந்த கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்..” என்று தெரிவித்தார்..



