தமிழக மக்களே உஷார்..!! அடுத்த 5 நாட்கள்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி எடுத்தது. கடந்த 20ஆம் தேதி மட்டும் சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. இதேபோல், கடந்த 21ஆம் தேதி தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. பிறகு வெயில் கொளுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்தில் வெப்பநிலை படிப்படியாக 3 முதல் 5 டிகிரி வரை உயரக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 30ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வரும் 28ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : OPS | ’ஈடு செய்ய முடியாத இழப்பு’..!! ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் இன்று முக்கிய உத்தரவு..!!

Chella

Next Post

Drugs: ரூ.15 கோடி மதிப்புள்ள 1.59 கிலோ கோகைன்..! நைஜீரியாவை சேர்ந்த நபர் கைது..‌!

Mon Mar 25 , 2024
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான அதன் நடவடிக்கையைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதிகாரிகள் இன்று புதுதில்லியில், சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள 1.59 கிலோ கோகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். ஆப்பிரிக்காவிலிருந்து இந்தோ-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்கு போதை மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் கடத்தலில் ஒரு கும்பல் ஈடுபட்டது. ரகசிய உளவுத் தகவலின் அடிப்படையில், பீகாரின் ரக்சவுலில் இருந்து டெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் ரயிலில் […]

You May Like