’செத்த மொழிக்கு எதற்கு ரூ.1,074 கோடி’..? பிரதமர் மோடியிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த உதயநிதி..!!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு இதுவரை அத்தகைய தாக்குதல்களை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என அமைச்சர் உதயநிதி பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பல அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த நீங்கள், அவர்கள் மீதான இலங்கையின் தாக்குதலும், கைதுகளும், படகு பறிமுதல்களும் தொடர்ந்து நடக்கிறதே? இதை ஏன் தடுத்து நிறுத்தவில்லை? தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வர முடிகிற உங்களால் கஜா புயல், மிக்ஜாம் புயல் என பேரிடர்களால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்ல ஒரு முறை கூட வராதது ஏன்? 2 கோடி வேலைவாய்ப்பு தருகிறேன் என்ற உங்கள் வாக்குறுதி எங்கே போனது?

இந்தியாவை 2020ஆம் ஆண்டில் வல்லரசு ஆக்குவேன் என்று நாள் குறித்தீர்களே, அதனை 27 ஆண்டுகள் தள்ளிப்போட்டது எதனால்? கருப்பு பணத்தை மீட்பேன் என்று கடுகு டப்பாவிலும், சுருக்குப் பையிலும் எங்கள் மக்கள் சேமித்து வைத்திருந்த 500, 1000-த்தை பிடுங்கினீர்களே? கருப்புப் பணத்தை மீட்காதது ஏன்? ஏழரை லட்சம் கோடி ஊழல் செய்த உங்களை CAG அறிக்கை அம்பலப்படுத்தியும் அதைப்பற்றி வாய் திறக்காதது ஏன்? அடுக்கடுக்காய் வடக்கே 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை ஒரே வாரத்தில் திறந்த நீங்கள், 2019இல் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்-க்கு அடுத்த செங்கலை எப்போது வைப்பீர்கள்?

அதானியின் நலனுக்காக நாடு நாடாகச் சுற்றும் நீங்கள் எங்கள் மீனவர்களின் நலனுக்காக எத்தனை முறை இலங்கைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளீர்கள்? கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுக அடுக்கடுக்காக தன்னுடைய சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கும்போது, நாட்டை 10 ஆண்டுகள் ஆண்டப் பிறகும் சாதனைகளைச் சொல்ல முடியாமல், எதிர்க்கட்சிகளையே நீங்கள் விமர்சித்துக் கொண்டிருப்பது ஏன்? வாழும் தமிழின் வளர்ச்சிக்கு பெரிதாக நிதி இல்லை, செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.1074 கோடி எதற்கு? நீங்கள் தமிழை, தமிழர்களை அலட்சியப்படுத்துவதை சுயமரியாதையுள்ள தமிழர்கள் ஏற்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்? என தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Read More : Accident | முன்னால் சென்ற லாரியை ஓவர்டேக் செய்த ஆம்னி பேருந்து..!! அடுத்த நொடியே நடந்த சம்பவம்..!! இருவர் பலி..!!

Chella

Next Post

கடல்நீரில் மிதக்கும் கேரளா!… சுனாமிபோல் பல அடி உயரத்துக்கு எழுந்த அலை!… அச்சத்தில் மக்கள்!

Tue Apr 2 , 2024
Kerala: கடல் சீற்றம் காரணமாக கேரளாவில் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்ததில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடல் சூழ்ந்த மாநிலமான கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்றது. ஒட்டுமொத்த கடலும் திடீரென மிகவும் ஆக்ரோஷமாக கொந்தளித்து, பல அடி உயரத்துக்கு அலைகள் எழும்பியது. அமைதியாக இருந்த கடல், திடீரென பயங்கர சத்தத்துடன் கொந்தளிப்பதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. […]

You May Like