வரும் 2026 தேர்தலில் திமுகவுக்கு தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்…! அண்ணாமலை கருத்து…!

Annamalai K BJP

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு அரசு பள்ளிகள் பலிகடா ஆக்கப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை அளித்து, கடந்த 9-ம் தேதி, திமுக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றிருக்கிறது. திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப் பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பள்ளிக் கல்வித் துறை ஏற்கெனவே பரிதாப நிலையில் இருக்கிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே, சுமார் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து, திமுகவின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நடத்த, ஊரை அடித்து உலையில் போட்டிருக்கும் திமுகவினருக்குச் சொந்தமாக திருச்சியில் வேறு இடங்களா இல்லை? ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கு. திமுகவின் இந்த மக்கள் விரோதப் போக்குக்கு, வரும் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பீகாரை போல நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்!. அக்டோபரில் வெளியாகும் அறிவிப்பு?. தலைமைச் செயலர்களுக்கு பறந்த உத்தரவு!

Thu Sep 11 , 2025
பீகாரில் மேற்கொள்ளப்பட்டதைப் போலவே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து விவாதிக்க நேற்று (புதன்கிழமை) டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. நாள் முழுவதும் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (CEO) பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து சுமார் […]
special revision voter list

You May Like