ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு” பொதுமக்கள் பார்வையிட விண்ணப்பிக்கலாம்…!

Rajbhavan 2025

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில்; கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த கொலு கொண்டாட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.தினமும் மாலை 4 முதல் 5 மணிவரை நடைபெறும் வழிபாடு நிகழ்ச்சியிலும் மாலை 5 முதல் 6 மணி வரை நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிகளிலும் தனிநபர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பார்வையாளர்களாக கலந்துகொள்ளலாம்.

ஆர்வமுள்ள தனிநபர்கள், பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் https://tnrajbhavantour.tn.gov.in/navaratri/ என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி செப். 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவில், தங்கள் பெயர், வயது, பாலினம், முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, பார்வையிட வரும் தேதி உள்ளிட்ட விவரங்கள் இருக்க வேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் தினமும் அதிகபட்சம் 200 பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கு அவர்களுக்கான ஒதுக்கப்பட்டுள்ள தேதியையும், நேரத்தையும் உறுதிப்படுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்படும்.

பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்துக்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு முன்னதாக, ஆளுநர் மாளிகை இரண்டாம் (2) நுழைவாயில் வழியாக வந்தடைய வேண்டும். தங்களுக்கு அனுப்பப்பட்ட உறுதிப்படுத்திய மின்னஞ்சலின் நகல் மற்றும் அசல் புகைப்பட அடையாளச் சான்றை கொண்டு வர வேண்டும். ஆர்வமுள்ள வெளிநாட்டினரும் ‘நவராத்திரி கொலு 2025’ கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளலாம் அவர்களின் அசல் பாஸ்போர்ட் மட்டுமே அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌.

Vignesh

Next Post

தைரியம் இருந்தா நேரடியாக மோத வேண்டும்...! இந்த ஆம்புலன்ஸ் மூலம் நாடகம் வேண்டாம்...! இபிஎஸ் அதிரடி சவால்...!

Thu Sep 11 , 2025
தைரியம் இருந்தால் நேரடியாக மோத வேண்டும். அதை விட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நாடகத்தை அரங்கேற்றுகின்றனர் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பேசிய அவர்; முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க செல்லவில்லை. […]
44120714 saamy33

You May Like