இனி படிப்படியாக மழை அதிகமாகும்… வானிலை கொடுத்த தகவல் …

தமிழக்தில் மழைப் பொழிவு படிப்படியாக அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது…

வரும் 29ம் தேதி முதல் பருவ மழை தொடங்க உள்ளது. முன் கூட்டியே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. இன்று முதல் படிப்படியாக மழை  பொழிவு அதிகரிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 4ம் தேதி வரை மழை பொழிவு நீடிக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப்பொறுத்தவரை மழைப்பொழிவு மிதமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் இயக்குனர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் ’’ மிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். இன்று தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.’’

Next Post

தீபாவளி சிறப்பு பேருந்துகள்..!! வசூலை அள்ளிய தமிழக அரசு..!! எத்தனை கோடி தெரியுமா?

Thu Oct 27 , 2022
தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கியதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.9.54 கோடி வருவாய் ஈட்டப்பட்டு இருப்பதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.  தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் கடந்த 21ஆம் தேதி முதல் 23 வரை இயக்கப்பட்டது. இதில், சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் என 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு தேவையான அளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பயணிகள் வசதிக்காக […]

You May Like