விருதுநகர் அருகே சத்திரரெட்டியாபட்டியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட ஏழு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அப்போது பேசிய அவர், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜருக்கு , மெரினாவில் இடம் கொடுக்க கருணாநிதி மறுத்ததாக எடப்பாடி பழனிசாமி பொய் பிரச்சாரம் செய்கிறார். காமராஜர் உடல் அடக்கம் செய்யும் இடத்தை தேர்வு செய்ததே கருணாநிதிதான். அந்த உண்மை கூட தெரியாமல் அடுத்தடுத்த பொய்கள கூட்டமே இல்லாமல் பேசி வருகிறார்.
காமராஜருக்கு மகனை போல் இறுதிச் சடங்குகளை செய்தார் கருணாநிதி செய்தார். டெல்லியில் காமராஜரை வீட்டோடு வைத்து கொளுத்த பார்த்தது சங்கிக் கூட்டம். தேர்தல் என வந்துவிட்டால் தமிழக தலைவர்கள் மீது சங்கிகளுக்கு பாசம் வந்துவிடுகிறது. இல்லாவிட்டால் தமிழர், தமிழ்நாடு, தமிழகம் என்றாலே சங்கிகளுக்கு வெறுப்புதான்.
இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டத்தை கேட்டு மக்கள் மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மட்டும் சோகமாக உள்ளார். பணத்திற்கு பதிலாக கூப்பன் தருவதால் மக்கள் வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் திமுக கமிஷன் அடிக்கும் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். கூப்பனாக கொடுக்கிறோம், அதை வைத்து உங்களுக்கு வேண்டிய பொருளை, தெரிந்த கடையில் வாங்க போகிறீர்கள். இதில் திமுக எப்படி கமிஷன் அடிக்கும்? என்றார்.
Read more: 60 நாட்களுக்கு துரித உணவு சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் என்ன நடக்கும்..?



