தலைநகர் டெல்லியின் துவாரகா பகுதியில் 22 வயது இளம்பெண் ஒருவர் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த வர்ஷா கோமல் (22) என்ற பெண்ணுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி அமன் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு டெல்லி படு சராய் பகுதியில் வசித்து வந்தார். திருமணம் ஆனது முதல் கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்திரவதை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் அந்த பெண் உயிரிழந்தார்.
வர்ஷாவின் தந்தை தினேஷ் போலீஸில் அளித்த புகாரில், திருமணத்திற்குப் பிறகு அவரது மகளை கணவன் அமன் மற்றும் மாமியார் குடும்பத்தினர் வரதட்சணை கோரி தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், உடல் ரீதியான தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஆகஸ்ட் 21 அன்று தினேஷுக்கு, அமன் தனது மகளை மயக்கநிலையில் மருத்துவமனையில் சேர்த்ததாக தகவல் கிடைத்தது. பின்னர் மருத்துவர்கள் வர்ஷா இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதையடுத்து, ஆகஸ்ட் 23 அன்று எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டனர். கணவரை கைது செய்த காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும், மரணத்திற்கு வழிவகுத்த சூழல்களை உறுதிப்படுத்த விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே இளம்பெண் மரணமடைந்த சம்பவம், உள்ளூர் மக்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Read more: தீபாவளி பரிசு இல்லை… தசராவுக்கு முன்பே ஜாக்பாட்! மோடி அரசு சொல்லப் போகும் குட்நியூஸ்..