தமிழக கூட்டுறவு வங்கி வேலை வாய்ப்பு.. கை நிறைய சம்பளம்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

job 1 1

கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2,000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


பணியின் விவரங்கள்: கூட்டுறவு வங்கி, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு கடன் சங்கம், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்களில் உள்ள உதவியாளர்/ இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 01.07..2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதாவது 01.07.2007 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்.

ஒசி பிரிவினர் 32 வயது வரையும், ஒசி பிரிவு முன்னாள் ராணுவத்தினர் 50 வயது வரையும், ஒசி பிரிவு மாற்றுத்திறனாளிகள் 42 வயது வரையும் இருக்கலாம். எஸ்சி/எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவினர் மற்றும் அதில் சிறப்பு பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. அதே போன்று, அனைத்து இனைத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி: கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 10+2+3 என்ற முறையில் டிகிரி தகுதியை பெற்றிருக்க வேண்டும் மேலும், கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

கூட்டுறவு பயிற்சிகளாக கருதப்படுபவை:

  • தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு மேனேஜ்மெண்ட் டிப்ளமோ
  • சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் கூட்டுறவு மேனேஜ்மெண்ட் உயர் டிப்ளமோ ( Higher Diploma in Cooperative Management).
  • கூட்டுறவு சாரந்த டிகிரி முடித்தவர்கள் கூட்டுறவு பயிற்சி தகுதியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
  • விண்ணப்பதார்கள் பள்ளி படிப்பு அல்லது கல்லூரி படிப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருந்த்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கூட்டுறவு சங்க பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களில் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு முறையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு பட்டப்படிப்பு தரத்தில் 200 கேள்விகளுடன் 170 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். ஆங்கிலம் மற்றும் தமிழில் தேர்வு நடைபெறும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இடஒதுக்கீட்டை சார்ந்து தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு அரசின் கீழ் கூட்டுறவு சங்கங்களில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்னப்பிக்க விரும்பும் நபர்கள் அந்நந்த மாவட்டத்தில் மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகம் (DISTRICT RECRUITMENT BUREAU-2025) மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025 மாலை 5.45 மணி வரை.

Read more: ரூ.4600 கோடி சொத்து! புதிய படங்கள் இல்லை, ஆனால் இந்தியாவின் பணக்கார நடிகை! யார் தெரியுமா?

English Summary

The Tamil Nadu government has issued a notification to fill 2,000 vacant assistant posts in cooperative banks and societies.

Next Post

3 முறை நீட் தேர்வில் தோல்வி.. JEE இல்லை, ஆனா இப்ப டேட்டா சயின்டிஸ்ட்! சென்னை ஐஐடி மாணவரின் ஊக்கமளிக்கும் வெற்றிக்கதை!

Fri Aug 8 , 2025
3 முறை நீட் தேர்வில் தோல்வி… ஜேஇஇ ரேங்க் இல்லை.. கணினி அறிவியல் பின்னணி இல்லை. பெரும்பாலான மாணவர்கள் இதுபோன்ற சூழலில் தோற்றுப் போனதாக எண்ணி சோர்வடைவார்கள்.. ஆனால் சஞ்சய் அப்படி நினைக்கவில்லை… இன்று, அவர் புனேவில் உள்ள சின்ஜெண்டாவில் அசோசியேட் டேட்டா சயின்டிஸ்டாக முழுநேர வேலை செய்கிறார். பாரம்பரிய பொறியியல் வழிகளின் மூலம் அவர் இந்த நிலையை அடையவில்லை.. சென்னை ஐஐடியில் பிஎஸ் படிப்பில் டேட்டா சயின்ஸ் அண்ட் […]
iit madras student

You May Like