தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி என மிரட்டி அடிபணிய வைக்க முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவிகளுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.. ஆனால் இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் குறைவான தொகையே வழங்கப்படுவதாக கூறி தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்ப்பட்டது.. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2024-25, 2025-26 ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த அரசுக்கு உத்தரவிட்டது.. ஆனால் தமிழ்நாடு அரசு கல்விக்கட்டணத்திற்கான நிதியை வழங்க வில்லை என்று கூறி , தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பள்ளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவின் படி நிதி வழங்கப்படவில்லை என வாதிட்டார்.. அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 60% நிதியை மத்திய அரசு தர வேண்டும் என்றும் 40% நிதியை மாநில அரசு வழங்க வேண்டும் என்ற நிலையில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி வழங்கப்படும் என மத்திய அரசு கூறியதாக தெரிவித்தார்..
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் நிதி கொடுப்பார்களே என கூறினார்.. அப்போது கூடுதல் தலைமை வழக்கறிஞர், மத்திய அரசின் இந்த மிரட்டலுக்கு தமிழக அரசு அடிபணியாது என்றும் இதுகுறித்த உரிய தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.. இதையடுத்து வழக்கின் விசாரணை அக்டோபர் 24-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Read More : தவெகவுக்கு புதிய தலைவலி.. விஜய் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!