கைவிரல் ரேகையை பதிவு செய்யாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்ற செய்தியில் உண்மையில்லை என தமிழக அரசின் Fact Check தெரிவித்துள்ளது.
அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும்பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் 7 சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. ரேஷன் அட்டை வைத்திருக்கும் அவர்களுக்கு மத்திய மாநில அரசாங்கம் சார்பில் பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அரசின் சலுகைகளை பெறுவதற்கு ரேஷன் கார்டு என்பது அவசியமாகும். இந்த நிலையில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் கைவிரல் ரேகையை பதிவு செய்யாத ரேஷன் அட்டைகள் செல்லாது என்ற செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. ரேஷன் உதவிகள் கிடைக்க kyc சரி பார்ப்பது அவசியம் என்றும் ஆதார், மொபைல் எண், கைரேகை மற்றும் இறந்தவர்கள் பெயர் நீக்கம் போன்றவற்றை அப்டேட் செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தவறான செய்தி என்றும் மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என தமிழக அரசின் Fact Check விளக்கமளித்துள்ளது.
Read more: மீண்டும் பரவும் நிபா வைரஸ்..கேரளாவில் 2 பேருக்கு பாதிப்பு உறுதி.. 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!