தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்றது.. எனினும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் தவெகவுக்கு கிடைக்காமல் போனதால், ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது.. ஒரு வழியாக காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்ததால் தவெகவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 120 இடங்கள் கிடைத்தன..
இதையடுத்து கடந்த மாதம் 10-ம் தேதி தமிழகத்தின் 12-வது முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார்.. அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.. தொடர்ந்து மே 13-ம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி பெற்றது. அதன்பின்னர் மே 21-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் 23 பேரும், 22-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தில் 2 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்..
இந்த நிலையில் தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது.. காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்ற உள்ளார்.. அவர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசிப்பார்.. இந்த உரை சுமார் 1 மணி நேரம் இடம்பெறும் என்று கூறப்படுகிறது..
அதன்பின்னர் ஆளுநரின் உரையை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தமிழில் வாசிப்பார்.. கூட்டம் முடிந்த உடன் அனைத்து உறுப்பினர்களிடமும் கவர்னர் அர்லேகர் புறப்பட்டு செல்வார்.. அதன்பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும்.. 3 அல்லது 4 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது..
ஆளுநர் உரை நிகழ்த்துவாரா..?
கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் ஆர்.என்.ரவி.. 2022-ம் ஆண்டு முதன் முதலில் தமிழக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தினார்.. அவர் முழுமையாக வாசித்த ஒரே உரையும் இது தான். பின்னர் தமிழக அரசு – ஆளுநர் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதால் அவர் தனது உரையை முழுமையாக வாசிக்கவில்லை.. தேசிய கீதம் முதலில் பாடப்படவில்லை என்று கூறி 2023, 2024, 2025, 2025 என ஆளுநர் ஆர்.என்.ரவி 4-வது ஆண்டாக மீண்டும் தனது உரையை புறக்கணித்திருந்தார்..
இந்த நிலையில் கடந்த கால பேரவை மரபுகள் முறையாக பின்பற்றப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார்.. எனவே பேரவை மரபுகளை ஏற்று ஆளுநர் அர்லேகர் இன்று தனது உரையை வாசிப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது..
Read More : சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேச அருகை இல்லை.. உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி..!
.



