சென்னை மக்கள் கவனத்திற்கு… இன்று காலை 9 மணி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்..! முழு விவரம்

Mk Stalin Tn Govt 2025

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 13 வார்டுகளில் நடைபெறவுள்ளது.


பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்–1), வார்டு-14ல் திருவொற்றியூர் நெடுங்சாலை, சி.எஸ்.ஐ. தேவாலயத்திற்கு அருகிலுள்ள திறந்தவெளி மைதானத்தில் நடைபெற உள்ளது. மாதவரம் மண்டலம் (மண்டலம்–3), வார்டு-32ல் சூரப்பட்டு, சண்முகபுரத்தில் உள்ள சமூதாய நலக்கூடம். தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்–4), வார்டு-44ல் பெரம்பூர், துளசிங்கம் தெருவில் உள்ள எஸ்.கே.என்.எஸ்.பி.எம்.சி. விவேகானந்தா வித்யாலயா இளநிலை கல்லூரியில் நடைபெற உள்ளது.

மேலும் இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-49ல் பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ. சாலையில் உள்ள YMCA கட்டடம். திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-77ல் பழைய ஆடு தொட்டி சாலையில் உள்ள வார்டு 77 அலுவலகம். அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-89ல் முகப்பேர், முகப்பேர் பிரதான சாலையில் உள்ள சின்னசாமி திருமண மண்டபம். அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-101ல் கீழ்பாக்கம், கீழ்பாக்கம் கார்டன் காலனியில் உள்ள ஜெ ஜெ அரங்கம்.

தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-124ல் மைலாப்பூர், ஆர்.கே. மட் சாலையில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானம். கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10), வார்டு-135ல் அசோக் நகர், 1வது அவென்யூவில் உள்ள லக்‌ஷ்மி மஹால். ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-166ல் நங்கநல்லூர், எம்ஜிஆர் சாலையில் உள்ள ஹரிஹரன் மஹால். அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-180ல் திருவான்மியூர், மருந்தீஸ்வரர் திருமண மண்டபம்.

பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-191ல் ஜல்லடியன்பேட்டை, பாரதியார் சாலையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15), வார்டு-194ல் ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கைலாஷ் கார்டன் ஆகிய 13 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ரூ.1,000 உரிமைத்தொகை வருமா..? தற்காலிகமாக நிறுத்திய தமிழ்நாடு அரசு..!! குடும்பத் தலைவிகள் அதிர்ச்சி..!!

Tue Sep 2 , 2025
தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து மாவட்டங்களிலும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம், கடந்த ஜூலை 15ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14 ஆம் தேதியுடன் தனது முதல் கட்டத்தை முடித்துவிட்டது. இதில் பெரும்பாலானா மக்கள் கலந்து கொண்டு, அரசு திட்டங்களுக்கான மனுக்களை சமர்ப்பித்தனர். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக பெண்கள் அதிக ஆர்வம் காட்டி, விண்ணப்பங்களை அளித்துள்ளனர். இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு வழங்கப்படும் […]
Magalir 1000

You May Like