தமிழ்நாடு உட்பட 5 மாநில அணைகளின் நீர்மட்டம் பெரும் சரிவு!… ஷாக் ரிப்போர்ட்!

Water level: தென் மாநிலங்களில் 42 முக்கிய அணிகளின் நீர்மட்டம் பெரும் சரிவடைந்துள்ளதாக மத்திய நீர்வள ஆணைய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு வெயிலின் வெப்பம் பிப்ரவரி மாதம் முதலே தொடங்கிவிட்டது. தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. ஏப்ரல் மாதம் முடிவதற்குள்ளாகவே வெயிலின் வெப்பம் தாங்க முடியாததாக இருக்கிறது. பல ஏரிகள், சிறிய அளவிலான நீர்நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இன்னும் மே மாதம் என்ன ஆகுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

தொடர்ந்து, கொளுத்தி வரும் வெயிலால், சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்னை ஏற்படுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. ஏனென்றால், சென்னையில் உள்ள புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி ஆகியவை முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. இதேபோல், மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 55 அடிக்கு கீழாக குறைந்துள்ளது. தற்போது குடிநீர் தேவைக்காக மட்டுமே அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடும் நிலவிவருகிறது.

இந்தநிலையில், தென் மாநிலங்களில் 42 முக்கிய அணிகளின் நீர்மட்டம் பெரும் சரிவடைந்துள்ளதாக மத்திய நீர்வள ஆணைய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா தெலங்கானாவில் உள்ள 42 அணைகளில் 2023ம் ஆண்டு இதே கால கட்டத்தில் 53.8 பில்லியன் க்யூபிக் மீட்டர் நீர் இருந்ததாகவும், தற்போது 8.8 பில்லியன் க்யூபிக் மீட்டர் மட்டுமே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பருவமழை குறைவாக பெய்ததே இதற்கு காரணம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: பெரும் சோகம்..! தேர்வு முடிவு வெளியான 30 மணி நேரத்தில் 7 பேர் தற்கொலை…!

Kokila

Next Post

டீப்ஃபேக் வீடியோக்களை உண்மையென நம்பும் 57% பேர்..!! 31% பேர் பணத்தை இழந்துள்ளனர்..!! வெளியான அதிர்ச்சி அறிக்கை..!!

Sat Apr 27 , 2024
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் AI எனும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பல நிறுவனங்கள் ஊழியர்களின் வேலைகளை இலகுவாக செய்து முடிக்கின்றன. இதில், எத்தனை நல்லது உள்ளதோ அதே அளவு தீமைகளும் உள்ளது. AI தொழில்நுட்பத்தின் மூலம் டீப்ஃபேக் வீடியோக்கள் அதிகளவில் சோசியல் மீடியாக்களில் உலா வருகின்றன. இதில் எது உண்மை, எது பொய் வீடியோ என்பதை சாமானியர்களால் […]

You May Like