திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் விருப்பாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 49). இவரது மனைவி விஜயகுமாரி (44). கலியபெருமாளின் நண்பர் லோகநாதனுடன் கடந்த 30 ஆம் தேதி இருவரும் வேளாங்கண்ணிக்கு வந்தனர். அங்கு பேராலயத்திற்கு சொந்தமான ஒரு விடுதியில் இரண்டு நாட்கள் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
பக்கத்து அறையில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது கலியபெருமாள் தூக்கில் தொங்கியபடி கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். விடுதி மேலாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, விஜயகுமாரி மற்றும் லோகநாதன் இருவரும் விஷம் குடித்து இறந்த நிலையில் இருந்தனர். கலியபெருமாள் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.
அறையில் கிடைத்த கடிதத்தில் “நாங்கள் மூவரும் தற்கொலை செய்யப்போகிறோம், யாரும் காரணம் இல்லை” என்று எழுதப்பட்டிருந்தது. போலீசார் விசாரணையில், கலியபெருமாளின் மனைவி விஜயகுமாரி மற்றும் நண்பர் லோகநாதனுக்குள் கள்ளக்காதல் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இருவரும் ஊரை விட்டு ஓடியதால், அதிர்ச்சியடைந்த கலியபெருமாள் மனைவிக்காக போலீசில் புகார் அளித்திருந்தார்.
பின்னர் மனைவி திரும்பியதும் அவர் புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூவரும் ஒன்றாக வேளாங்கண்ணி வந்து அதன் பின்னர் தற்கொலை செய்து கொண்டனர். கள்ளக்காதல் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு காரணமா என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: நீங்கள் உயிரிழந்த பிறகு பீட்சாவுக்கு பணம் கொடுத்தால் போதும்..!! இப்படி ஒரு வினோத விளம்பரமா..?



