14 நாடுகளை கடந்து செல்லும் உலகின் நீளமான சாலை.. யூ-டர்னே தேவையில்லை..!

Pan American Highway 11zon

சாலைப் போக்குவரத்து உலகளவில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் போக்குவரத்து முறையாகும். கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் முக்கிய கட்டமைப்பாக சாலைகள் செயல்படுகின்றன. அந்த வகையில், உலகின் மிகவும் நீளமான சாலை வலையமைப்பாக கருதப்படுவது இந்த பான்-அமெரிக்கன் நெடுஞ்சாலை.


இந்த நெடுஞ்சாலை சுமார் 30,000 கிலோமீட்டர் நீளத்தில் விரிந்து கிடக்கிறது. வட அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்கா வரை நீள்ந்து செல்லும் இது, மெக்சிகோ, குவாத்தமாலா, எல் சால்வடார், ஹோண்டுராஸ், நிகரகுவா, கோஸ்டாரிகா, பனாமா உள்ளிட்ட நாடுகள் வழியாகவும், தொடர்ந்து கொலம்பியா, ஈக்வடார், பெரு, சிலி, அர்ஜென்டினா போன்ற தென் அமெரிக்க நாடுகளையும் இணைக்கிறது.

இந்த நெடுஞ்சாலையின் தனிச்சிறப்பு என்னவென்றால், ஒரே தொடர்ச்சியான பாதையில் 14 நாடுகள் வழியாக பயணம் செய்ய முடியும். இந்தப் பயணத்தில் சுமார் 6 விதமான நேர மண்டல மாற்றங்களை அனுபவிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. மேலும், கின்னஸ் உலக சாதனை பதிவுகளின்படி இது உலகில் மோட்டார் வாகனங்கள் செல்லக்கூடிய மிக நீளமான சாலை வலையமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ போன்ற நாடுகளில் பல சாலைகள் இணைந்து உருவானதால், இதற்கு பல்வேறு வழித்தடங்களும் உள்ளன.

இந்தப் பயணம் வெறும் தூரம் கடப்பது மட்டுமல்ல. அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள், வறண்ட பாலைவனங்கள், கடற்கரை பகுதிகள் என பல்வேறு இயற்கை சூழல்களை ஒரே பயணத்தில் காணலாம். உலகின் புவியியல் மற்றும் காலநிலை பல்வகை தன்மையை நேரடியாக அனுபவிக்க இந்த நெடுஞ்சாலை ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.

பொதுவாக இந்த நெடுஞ்சாலையை முழுவதும் கடக்க சுமார் 60 நாட்கள் வரை ஆகலாம். ஆனால் வாகன வகம், வானிலை மற்றும் பாதை போன்ற காரணிகளைப் பொறுத்து இந்த காலம் மாறுபடும். சிலர் இந்தப் பயணத்தை 100 நாட்களுக்கு மேல் எடுத்தும் முடித்துள்ளனர். 1925ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பெரும் திட்டத்தின் நோக்கம், அமெரிக்கக் கண்டத்தில் உள்ள நாடுகளுக்கிடையே பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் தொடர்புகளை மேம்படுத்துவதாகும். இன்று, பான்-அமெரிக்க நெடுஞ்சாலை உலகின் மிகவும் பிரபலமான மற்றும் வியப்பூட்டும் சாலை வலையமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது.

Read more: வாரத்திற்கு 2 முறை இதை செய்தாலே முகம் பளபளக்கும்.. ஜப்பானிய ஸ்கின் கேர் சீக்ரெட் இதுதான்..!

English Summary

The world’s longest road passes through 14 countries.. No U-turn required..!

Next Post

ஹூக்ளி நதியில் படகு பயணம் சென்ற பிரதமர் மோடி..! மேற்கு வங்க மக்களின் செழிப்புக்கு பாடுபடுவோம் என உறுதி..!

Fri Apr 24 , 2026
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்த சில மணிநேரங்களிலேயே பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை காலையில், கையில் கேமராவுடன் கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி நதிக்கரையில் தான் கழித்த நேரத்தையும், படகு சவாரியையும் படம்பிடித்துப் பகிர்ந்துகொண்டார். பிரதமர் ‘X’ (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பகிர்ந்த காட்சிகளில், அவர் ஒரு மரப்படகில் அமர்ந்தபடி கையில் கேமராவை வைத்திருப்பது தெரிகிறது; பின்னணியில் வித்யாசாகர் சேது பாலமும் காட்சியளிக்கிறது. அவர் […]
pm modi boat ride in hooghly river west bengal assembly electons 1777005015 1

You May Like