ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவது குறித்து தோனி சூசமாக பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டனாக ரசிகர்களால் கொண்டாடப்படும், மகேந்திர சிங் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து எப்போது ஓய்வு பெறுவார் என்று அடிக்கடி செய்திகள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளன. 43 வயதான தோனி, கடந்த 2020ம் ஆண்டே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தார்.
இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தல தோனி பேசியதாவது, அடுத்த ஐந்து வருடங்களுக்குக் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு எனது கண்கள் நன்றாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உடற்தகுதி எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டும். ஏனெனில் கண்களை மட்டும் வைத்து கிரிக்கெட் விளையாட முடியாது” என்று நகைச்சுவையாக பேசினார்.
“கடந்த இரண்டு சீசன்களில் நாங்கள் எதிர்பார்த்தபடி சிறப்பாகச் செயல்படவில்லை. ஆனால் ருத்ராஜ் மீண்டும் வரும்போது எங்களின் பேட்டிங் வரிசை ஒழுங்கமைக்கப்படும். ஐபிஎல் ஏலத்தில் அணியின் பலவீனங்களைச் சரிசெய்ய முயற்சிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் பேசிய தோனி, ”ரசிகர்களிடம் எனக்குக் கிடைத்த அன்பும் பாசமும், மறந்துவிடக் கூடாது. எனக்கு 43 வயது. நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். இது எனது கடைசி ஆண்டு எப்போது என்று அவர்களுக்குத் தெரியாது. நான் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன் என்பது ஒரு உண்மை. இந்த ஐபிஎல் முடிந்துவிட்டது.
பிறகு அடுத்த 6-8 மாதங்களுக்கு என் உடல் இந்த வகையான அழுத்தத்தைத் தாங்க முடியுமா என்பதைப் பார்க்க நான் உழைக்க வேண்டும். ஓய்வுத் திட்டங்கள் குறித்து இப்போது எதுவும் முடிவு செய்ய முடியாது” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல் வெளியீடு…!