நமது வாழ்க்கையில் பொதுவாக எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தால் சுவாரஸ்யமே இருக்காது. ஆனால், பலருக்கும் கடந்த காலத்திற்கு தற்போது சென்றால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கும். அந்தவகையில், பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர் தான் பாபா வாங்கா என்ற தீர்க்கதரிசி, தனது கனவில் வரும் நிகழ்வுகளை வரைந்து வெளியுலகிற்கு தெரியப்படுகிறார். பாபா வங்கா 1996ஆம் ஆண்டு மறைந்தாலும், அவரது கணிப்புகள் குறித்த தகவல்கள் உலகளவில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் 2025ஆம் ஆண்டில் நடக்கும் மோதல்கள், போர் மற்றும் அதனைத் தொடர்ந்து மனிதகுலம் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்ற கணிப்புகள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்தியாவில் என்னென்ன பேரழிவுகள் நிகழும் என்றும் அவர் கணித்துள்ளார். பொருளாதார சரிவு வேலையின்மை, பணவீக்கம் மற்றும் வறுமையை அதிகரிக்கக்கூடும். இது பல நாடுகளையும் பாதிக்கும் என்பதால், இந்தியாவிலும் அதன் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் நூறு ஆண்டுகளுக்கு பின், அதாவது 2130யில் வேற்று கிரகவாசிகளுடனான மனித தொடர்பையும் பாபா வங்கா கணிக்கிறார். ஒரு பெரிய சர்வதேச விளையாட்டுப் போட்டியின்போது இந்த தொடர்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. இதேபோல், மருத்துவத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். புதிய நோய்கள் உருவானாலும், செயற்கை உடல் உறுப்புகளை உருவாக்குவது போன்ற பெரிய மருத்துவ முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2025 ஆம் ஆண்டு முடிவதற்குள் ஆசிய நாடுகளில் மிகப்பெரிய சுனாமி மற்றும் பூகம்பம் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று இவர் கணித்துள்ளார். இருப்பினும், எப்போது நிகழும் என்று துல்லிய தகவல் இல்லை. இதை நம்பக்கூடிய வகையில் பசிபிக் பகுதியில் கடந்த பல மாதங்களாகவே பூகம்பம் ஏற்படுவதற்கான நடவடிக்கைகள் அதிகரித்து கடலின் வெப்பநிலை உயர்ந்தும் வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.