‘இந்த’ அறிகுறிகள் சிறுநீரக பிரச்சனைகளுக்கான எச்சரிக்கை.!!

சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான எந்த பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை பெரிது பாதித்து, வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோய் காரணமாகவும் சிறுநீரக செயல்பாடு பாதிக்கப்படுகிறது.சிறுநீரக நோய்களின் ஆரம்ப கட்டத்தில், பிரச்சனை வெளியே தெரியாது; காலப்போக்கில் மெதுவாக தீவிரமடையும். எனவே இந்த சிறுநீரக ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறுநீரகம் தொடர்பான எந்த பிரச்சனையும் உங்கள் அன்றாட வாழ்க்கையை பெரிது பாதித்து, வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிறுநீரகத்தின் செயல்பாடு, நம் உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்டுவது. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால், இரத்தத்தை வடிகட்டும், சுத்தம் செய்யும் முக்கிய வேலை பாதிக்கும். சிறுநீரக நோயில், சிறுநீரகம் சரியாக செயல்பட முடியாது. பின்னர் இந்த பிரச்சனை, நாள் செல்ல செல்ல தீவிரமடையும். இதனால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயமும் உள்ளது.
முக்கிய அறிகுறிகள் : நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படும்போது, ​​உடலில் உள்ள இரத்தத்தை வடிகட்ட முடியாமல் போவதால், உடலில் அரிப்பு, தசைப்பிடிப்பு, பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி, கால்கள் மற்றும் கணுக்காலில் வீக்கம், அதிக சிறுநீர் கழித்தல் அல்லது சிறுநீர் கழிக்க இயலாமை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். நாள்பட்ட சிறுநீரக நோய் காரணமாக தூங்க முடியாமலும் சிரமங்கள் ஏற்படும்.
சிக்கல் ஏற்பட காரணம்: ஹைபர் டென்ஷன், அதாவது உயர் இரத்த அழுத்தம் அல்லது சர்க்கரை நோய் காரணமாக சிறுநீரக பிரச்சனைகள் ஏற்படலாம். இது தவிர புகைபிடிப்பதும் ஒரு காரணம். அதிக உடல் எடையும் நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

Next Post

உஷார்.... ரூ.10,000 வரை அபராதம்...! இன்று முதல் புதிய விதி அமல்...; இதை மட்டும் செய்யக்கூடாது...!

Wed Oct 26 , 2022
சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் புதிய போக்குவரத்து விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி இருசக்கர வாகனத்தில் வாகன ஓட்டுநர் குடித்திருந்து பின்னால் அமர்ந்திருக்கும் நபர் மது குடிக்காமல் இருந்தாலும் ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பது போல பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அதே அபராதம் விதிக்கப்படும். இனி இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார்களில் வாகன ஓட்டுநர் குடித்து இருந்தால் அவர்களுடன் பயணம் […]

You May Like