குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஓர் நிதியாண்டில் பண பரிவர்த்தனைகள் மேற்கொண்டால் வருமான வரித்துறையினரால் நாம் கண்காணிக்கப்படுவோம். எனவே, குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அதிகப்படியான பண பரிவர்த்தனைகளை செய்தோம் என்றால் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.
நீங்கள் அறிக்கை தாக்கல் செய்யும்போது பண பரிவர்த்தனை குறித்து குறிப்பிடவில்லை என்றால், வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பக்கூடும். நிதி முதலீடுகள், வங்கி இருப்பு, சொத்து சம்பந்தமான பரிவர்த்தனைகள் மற்றும் பங்கு சந்தைகள் என்று அதிகப்படியான பரிவர்த்தனைகள் நடைபெறுகின்ற இடங்களை வருமானவரித்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
உங்கள் வங்கியின் சேமிப்பு அக்கவுண்டில் நிதியாண்டு ஒன்றில் 10 லட்சத்திற்கும் அதிகமான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு இருந்தால், அதை நீங்கள் வருமானவரித்துறையிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
அத்துடன் கரண்ட் அக்கவுண்டில் பணம் வைக்க 50 லட்சம் வரை வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கி பிக்சட் டெபாசிட்டில் 10 லட்சத்திற்கும் அதிகமாக இருப்பு வைத்தால் அதை வருமானவரித்துறையிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
கிரெடிட் கார்டு கட்டணங்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் இதை வருமானத்துறையிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம். ஒரு வருடத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான செட்டில்மண்டுகளை நீங்கள் மேற்கொண்டு இருந்தால் கட்டாயம் வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பக்கூடும். அதற்கான அறிக்கைகளை நாம் தாக்கல் செய்ய வேண்டும்.
30 லட்சத்திற்கும் அதிகமான அசையா சொத்துக்களை வாங்கினாலோ அல்லது விற்றாலோ வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.