fbpx

வயிற்றில் உள்ள பூச்சிகளை ஒரே நாளில் அழிக்கும் அற்புத காய்.!?

பொதுவாக வெப்ப மண்டலங்களான ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் இந்த மருத்துவ தன்மை நிறைந்த சுண்டைக்காய் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் சுண்டைக்காயை ஆயுர்வேத மருத்துவத்திலும் சித்த மருத்துவத்திலும் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு பல்வேறு நோயை குணப்படுத்தும் சுண்டைக்காயில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்?

1. ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தீர்த்து செரிமான மண்டலத்தை சீராக செயல்பட உதவி புரிகிறது.
2. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் இரும்பு சத்து குறைபாடை சரி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
3. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவி புரிகிறது.
4. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து ரத்த நாளங்கள் சீராக செயல்பட வைக்கிறது. இதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
5. குழந்தைகளுக்கு வயிற்றில் உள்ள புழு பூச்சிகளை மலம் மூலமாக வெளியேற்றி வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.
6. சுண்டைக்காயல் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளதால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும். மேலும் சருமம் பொலிவாக இருக்கவும் உதவி செய்கிறது.
இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய சுண்டைக்காயில் கசப்பு தன்மை அதிகமாக இருப்பதால் பலரும் சாப்பிடுவதற்கு தயங்குவார்கள். இதற்கு சுண்டக்காயை மோர், உப்பு கலந்து வத்தலாக செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும்போது இந்த சுண்டைக்காய் வத்தலை நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பாடுடன் கலந்து சாப்பிடலாம்.

Baskar

Next Post

"காந்திய கொன்னவங்களுக்கு என்ன சுடுறது கஷ்டமா.?.." ஈஸ்வரப்பா கொலை மிரட்டலுக்கு காங்கிரஸ் எம்பி பதிலடி.!

Sun Feb 11 , 2024
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக தென் மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையே மோதல் சூழல் உருவாகியுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த மோதல் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மாநிலங்களின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் குற்றம் சாட்டியிருந்தன. இது தொடர்பாக பேசிய […]

You May Like