30 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் தங்களுடைய எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க வேண்டும் என்று நினைத்தால் கீழே குறிப்பிடப்படும் 6 விஷயங்களை எக்காரணத்தைக் கொண்டும் அதிகப்படியாக உட்கொள்ளக் கூடாது. பொதுவாக நமது உடல் சிறு வயதில் இருப்பது போல வயது ஆக ஆக இருப்பது இல்லை. என்ன சாப்பிட்டாலும் சிறு வயதில் எந்த பாதிப்பும் ஏற்படாத அளவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், குறிப்பிட்ட வயதுக்கு பின்னர் எது சாப்பிட்டாலும் நமக்கு குடைச்சலை கொடுக்கும். 30 வயதிற்குப் பின் நாம் கீழ்காணும் 6 உணவுகளை எடுத்துக் கொள்கிறதால் நம்முடைய எலும்பு பலவீனமடையும். எனவே அவற்றை தவிர்ப்பது அவசியம். என்னென்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.?
சர்க்கரை மற்றும் உப்பு இரண்டையும் 30 வயதிற்குப் பின் நமது உணவில் இருந்து குறைத்துக் கொள்வது அவசியம். அளவுக்கு மீறி இது இரண்டையும் நாம் சாப்பிடும் போது நமது உடலில் இருக்கும் கால்சியம் சத்துக்கள் குறைந்து எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. அடுத்ததாக காஃபின். நாம் குடிக்கின்ற காபி மற்றும் டீ போன்ற பானங்களில் இருந்து நம் உடலுக்கு கிடைக்கும் காஃபின் உடலில் கால்சியம் வெளியேற செய்கிறது. இதனால் உடலில் பி எம் டி குறைகிறது. இது எலும்பு தேய்மானத்திற்கு வழிவகை செய்கிறது. உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது உடலில் இருக்கும் கால்சியத்தை இழக்க காரணமாக இருக்கிறது.
உடல் உழைப்பு இல்லாத வேலை செய்பவர்கள் அன்றாடம் நடைபயிற்சி மற்றும் சில எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும். முட்டை, கோழி மற்றும் இறைச்சி வகைகளை அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும் போது விலங்குகளில் இருக்கும் புரதம், கால்சியத்தை சிறுநீர் வழியே வெளியேற்ற காரணமாக இருக்கிறது. கூல் ட்ரிங்க்ஸ் அடிக்கடி குடிப்பவர்கள் எலும்பு தேய்மானத்திற்கு அதிகப்படியாக இரையாகின்றனர். இதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. 30 வயது ஆகிய ஒரு நபர் புகைபழக்கத்தை நிறுத்தி விடுவது எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது. இல்லையென்றால் அதில் இருக்கும் நிக்கோட்டின் உடலின் கால்சியம் சத்தை எடுத்துக் கொள்ளக்கூடிய ஆற்றலுக்கு எதிராக வேலை செய்கிறது. எனவே இது எலும்பு தேய்மானத்திற்கு வழிவகை செய்யும்.