பெரும்பாலும் கீரைகள் என்றாலே சத்துக்கள் நிறைந்தது தான். அதிக காசு கொடுத்து நாம் வாங்கும் பழங்களை விட, கீரைகள் விலையும் குறைவு சத்துக்களும் அதிகம்.
குறிப்பாக, செலினியம், மேங்னீஸ், இரும்புச் சத்து போன்ற நுண்ணிய கனிமங்கள் கீரை வகைகளில் தான் அதிகம் காணப்படுகின்றது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
இதனால், இந்த கீரைகள் இயல்பிலேயே நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக, முருங்கைக் கீரையில் இருக்கும் பயன்களும் சத்துக்களும் வேறு எந்தக் கீரையிலும் இருப்பது இல்லை என்று மருத்துவர் சிவராமன் கூரியுள்ளார். ஆம், மற்ற கீரைகளை விட முருங்கைக் கீரையில் தான் அதிகப்படியான இரும்புச் சத்து உள்ளது.
இதனால் கண் பார்வை கூர்மை அடைகிறது. நரம்பு மண்டலம் பலப்படுத்தப்படுகிறது. மேலும், இது போன்ற பல்வேறு ஆற்றல்கள் முருங்கைக் கீரையில் உள்ளதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். முருங்கைக்கீரை மட்டும் இல்லாமல், பசலைக் கீரை, பாலக்கீரை, பொன்னாங்கன்னி போன்ற கீரைகளும் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
கல்லீரலை பலப்படுத்த கரிசலாங்கண்ணி கீரையை விட சிறந்த மருந்து இருக்கே முடியாது. செரிமான பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு, சிறுகீரை கட்டாயம் கொடுக்க வேண்டும். இந்தக் கீரை, குழந்தைகளின் செரிமான மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மனிதன் நோயால் பெரும் அழிவை சந்தித்து வரும் நிலையில், சர்க்கரை நோய், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் ஆகியவற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள கட்டாயம் நமது உடலுக்கு ஃபைபர் சத்துகள் தேவைப்படுகிறது.
அந்த ஃபைபர் சத்துகள், கீரையில் தான் அதிகம் கிடைக்கிறது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். எனவே, இனி கண்ட உணவுகளை சாப்பிடாமல் முடிந்த வரை கீரை போன்ற ஆரோக்கியமான உணவுகளை நாம் சாப்பிட்டு வந்தால் மருத்துவமனைக்கு செலவு செய்யாமல் நீண்ட ஆயுசுடன் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.
Read more: கெட்டுப்போன மீனை சாப்பிடுவதால் வரும் பெரும் ஆபத்து!!! நல்ல மீனை பார்த்து வாங்குவது எப்படி??