fbpx

வாரத்தின் முதல் நாள்..!! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6%ஆக குறைக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து குறைவதும், பின்னர் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்று (டிசம்பர் 30) ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில், ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து 7,150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 120 ரூபாய் அதிகரித்து 57,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை தொடர்ந்து ஐந்தாவது நாளாக எந்த மாற்றமும் இன்றி கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : Jan 2025 Bank Holidays | ஜனவரி 1ஆம் தேதி வங்கிகள் இயங்குமா..? வாடிக்கையாளர்களே கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

A gold sovereign is being sold for Rs 57,200, up by Rs 120.

Chella

Next Post

என்ன பண்ணாலும் வெயிட் லாஸ் ஆகலயா..? அப்ப தினமும் இந்த உணவுகளை சாப்பிடுங்க..! சட்டன்னு எடை குறையும்..!

Mon Dec 30 , 2024
What are the best high-fiber foods for weight loss? How does it help you lose weight?

You May Like