fbpx

வாவ்..! 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு அரசு வழங்கும் இலவச ஸ்கூட்டி…! முழு விவரம்

ராஜஸ்தானில் வசிக்கும் மாணவிகளுக்கு மாநில அரசு இலவச ஸ்கூட்டிகளை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும். இலவச ஸ்கூட்டி திட்டம் 2024 தொடர்பான தகுதி, பலன்கள் மற்றும் விண்ணப்ப செயல்முறையை பார்க்கலாம். இலவச ஸ்கூட்டி யோஜனா 2024 இன் பலன்கள் பெற ராஜஸ்தான் மாநிலத்தில் வசிப்பவர்கள் மற்றும் இலவச ஸ்கூட்டி திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள், இந்தத் திட்டத்தில் இருந்து கிடைக்கும் பல்வேறு நன்மைகளைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இலவச ஸ்கூட்டி திட்டத்திற்கான பலன்கள்; இலவச ஸ்கூட்டி திட்டத்தில், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்தின் பலன்களை பெற முடியும்.ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் மாணவிகள் போக்குவரத்து தொடர்பான பிரச்சனையை தவிர்த்து விரைவாக பள்ளிகளுக்குச் செல்ல இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இலவச ஸ்கூட்டி திட்டத்தின் மூலம் பெற்ற ஸ்கூட்டருடன் எந்த ஒரு பெண் மாணவியும் தன் வீட்டிலிருந்து பள்ளிக்கு எளிதாக வந்து செல்லலாம்.மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது மாணவிகள் மட்டுமே இலவச ஸ்கூட்டரைப் பெற முடியும்.

மாணவர்களுக்காக அரசு அவ்வப்போது புதிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்று தான் இலவச ஸ்கூட்டி திட்டம், இந்த திட்டத்தில், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு ஸ்கூட்டி வழங்கி வருகிறது. மாநிலத்தில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு அரசால் இலவசமாக ஸ்கூட்டி வழங்கப்படுகிறது. பெண் மாணவர்களின் சுதந்திரம் மற்றும் கல்வித் துறையை ஊக்குவிக்கும் இந்தத் திட்டத்தின் கீழ், மாணவிகளுக்கு அரசால் இலவச ஸ்கூட்டி வழங்கப்படும். இதைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும் மற்றும் கல்விக்காக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்ல முடியும். ராஜஸ்தான் அரசின் இலவச ஸ்கூட்டி யோஜனா திட்டத்தைத் தொடங்குவதன் முக்கிய நோக்கம் பெண் மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவதாகும்.

இத்திட்டத்தின் கீழ், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு சலுகைகள் வழங்கப்படும். கல்வித் துறையில் பெண் மாணவர்களின் ஊக்கம் அதிகரிக்கும், இந்தத் திட்டத்தின் மூலம், 12ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற முயற்சிப்பார்கள். கல்லூரியில் சேரும்போது, இலவச ஸ்கூட்டி யோஜனாவின் கீழ் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Free scooter provided by Govt to 12th pass students

Vignesh

Next Post

Alert..! வங்கக்கடல் பகுதிகளின் மேல் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!

Sun Nov 10 , 2024
A new low pressure area is forming today over the Bay of Bengal

You May Like