fbpx

புற்று நோய் முதல், எய்ட்ஸ் நோய் வரை, பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் அற்புத மருந்து!!

Momordica cymbalaria

தற்போது உள்ள காலகட்டத்தில், 30 வயதிலேயே சர்க்கரைநோய், BP, மாரடைப்பு போன்ற பல நோய்கள் வந்து விடுகிறது. ஆனால் நமது முன்னோர், 80 மற்றும் 90களில் கூட ஆரோக்கியமாக இருந்தார்கள். இதற்க்கு முக்கிய காரணம், அவர்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறை தான். ஆனால் இன்று நம் வருமானத்தில் பாதி செலவு மருத்துவமனைக்கு தான் செல்கிறது. இனி வரும் காலங்களில், நாம் எதிர்பாராத கொடிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த நோய்களில் இருந்து தப்பிக்க, பணம் இருந்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் தான், நம்மால் கொடிய நோய்களில் இருந்து தப்பிக்க முடியும்.

இதனால் உடலுக்கு பலன் தரும் ஒரு சில பொருட்களை பற்றி தெரிந்துக்கொண்டு அதனை நம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், அதலைக்காய் மிகவும் அற்புதமான மருந்து. இந்த ஒரு காய் உங்களை சர்க்கரைநோய், மஞ்சள் காமாலை, புற்றுநோய் என அனைத்து நோய்களில் இருந்தும் பாதுகாக்கும். ஆம், உண்மை தான், இந்தியாவில் மட்டுமே கிடைக்கக்கூடிய இந்த காயில் இருக்கும் பல்வேறு சத்துக்கள், நம்மை பலவகையான நோய்களில் இருந்து பாதுகாக்கும். இதில், நீர்ச்சத்து, புரதம், கால்சியம், பொட்டாசியம் என பல சத்துக்கள் இதில் உள்ளது. இந்த காய்யை வைத்து, நாம் பொரியலாகவோ அல்லது புளி குழம்பாகவோ சமைத்து சாப்பிடலாம்.

இதை அடிக்கடி சாப்பிடுவதால், சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும். மேலும், இதிலுள்ள சத்துக்கள் புற்றுநோய் செல்கள் இரத்தத்தில் வளர்வதற்கான ஆற்றலை தடுக்கிறது. அதுமட்டுமின்றி இதில் உள்ள லெய்ச்சின், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, புற்றுநோய் செல்கள் பாதிப்பையும் தடுக்கிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் சிறுநீரக கற்கள் கறையும். அதலைக்காய் நம் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஹெச்ஐவி கிருமிகளின் தாக்கத்தை குறைக்கும். இதனால், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் இதனை சாப்பிட வேண்டும். மேலும், எடை குறைக்க விரும்புவோர் தங்கள் டயட்டில் முக்கியமாக சேர்க்க வேண்டியது இந்த அதலைக்காய்.

Read more: சமைப்பதற்கு முன்பு, அரிசியை தண்ணீரில் ஊற வைப்பவரா நீங்கள்? அப்போ கட்டாயம் இதை படியுங்க..

English Summary

health benefits of Momordica cymbalaria

Next Post

ஞானசேகரன் என்னுடைய தம்பி...! புதிய சர்ச்சையை கிளப்பிய சபாநாயகர் அப்பாவு...!

Tue Jan 21 , 2025
Gnanasekaran is my younger brother...! The speaker's father has sparked a new controversy

You May Like