பொதுவாக நம் உடல் உறுப்புகளில் முக்கியமான உறுப்பாக கருதப்பட்டு வருவது கல்லீரல். இது நம் உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றும் வேலையையும், உணவுகளை ஜீரணமாக்கும் வேலையையும் செய்து வருகிறது. இத்தகைய கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியமானதாகும். இதற்கு ஒரு சில உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கல்லீரலில் தேங்கும் நச்சுக்கள் ஒரே வாரத்தில் வெளியாகும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்.
- பூண்டு – தினமும் அதிக அளவு பூண்டை உணவாக சேர்த்துக் கொள்ளும்போது உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும் கல்லீரலில் எந்தவித நச்சுக்களும் தேங்காமல் பார்த்துக் கொள்கிறது.
- நெல்லிக்காய் – வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் அதிகமாக இருக்கும் நெல்லிக்காயை தினமும் காலையில் சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கல்லீரல் சீராக செயல்பட உதவுகிறது.
- ப்ரோகோலி – காலிஃப்ளவர் போலவே இருக்கும் இந்த ப்ரோக்கோலியை பலரும் சாப்பிடுவதில்லை. ஆனால் இதில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் கல்லீரலின் செயல்பாட்டுக்கு தேவையான ஆற்றலை இது தருகிறது.
- சிட்ரஸ் பழங்கள் – எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, அண்ணாச்சி பழம் நார்த்தங்காய் போன்ற சிட்ரஸ் அமிலங்களை கொண்ட பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதன் மூலம் கல்லீரல் சீராக செயல்படுகிறது.
இவ்வாறு உடல் சீராக செயல்படுவதற்கு பல விதமான வேலைகளை செய்யும் கல்லீரலை, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இதன் மூலம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாக, நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.