fbpx

ஒரு மாதத்தில் எத்தனை முறை செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்..? அதிகமா போனாலும் ஆபத்து தான்..!! கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

பாலியல் வாழ்க்கை உங்கள் ஒட்டுமொத்த மன, உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்துடன் இணைந்துள்ளது. நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், உங்கள் படுக்கையறை வாழ்க்கையைத் திரும்பப் பெறவும், நிறைவான உடலுறவை அனுபவிக்கவும் நீங்கள் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. அடிக்கடி செக்ஸ் வைத்துக்கொள்வதும் பிரச்சனைதான், உடலுறவே வைத்துக்கொள்ளாமல் இருப்பதும் ஒரு பிரச்சனைதான். இதை தவிர்க்க ஒரு மாதத்தில் எத்தனை முறை உடலுறவு வைத்துக் கொள்வது நல்லது என்பதை இங்கு பார்ப்போம். 

சமூகத்தை பொறுத்தவரை, குறிப்பாக இந்திய சமூகத்தை பொறுத்தவரை பாலியல் சார்ந்த விஷயங்களோ அல்லது உடலுறவு சார்ந்த விஷயங்களோ பேசக்கூடாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசுவதாலும், பாலியல் சார்ந்த அறிவுகள் வளர்வதாலும் ஒட்டு மொத்தமாக மக்கள் அனைவருக்குமே நண்மைகள் ஏற்படும். இதனால்தான் கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிப்பருவத்திலேயே இதுகுறித்த கல்வியை கற்றுக்கொடுக்க பலர் அறிவுறுத்துகின்றனர். காதல், காமம், இச்சை, ஆசை, தொடுதல் போன்ற பல உணர்வுகளை வெளிப்படுத்த உடலுறவு உபயோகப்படும். இது, காதலர்கள் அல்லது கணவன்-மனைவிக்குள் இருக்கும் இணக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. 

உடலுறவு வைத்து கொள்வதால் நம் உடலில் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை குறைப்பது, பதற்றத்தை தவிர்ப்பது என பல வகையான விஷயங்கள் இதில் அடங்கும். இதனால் நமக்குள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நல்ல தூக்கம், நல்ல ரத்த ஓட்டம் ஆகியவற்றிற்கு இது உதவும். இதனால் நம் தனிப்பட்ட வாழ்விலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும். 

பார்ட்னர்களை ஒப்பிடுகையில் கணவன்-மனைவியாக இருப்போர்தான் அதிக நாட்கள் உடலுறவில் ஈடுபடுவதாக ஒரு தரவு கூறுகிறது. ஒரு மாதத்தில் இத்தனை முறைதான் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என எந்த வரையறையும் கிடையாது. எப்போது தோன்றுகிறதோ, சூழ்நிலையை பொருத்து உடலுறவு வைத்துக் கொள்ளலாம். ஆனாலும், வாரத்திற்கு ஒருமுறை உடலுறவு வைத்துக்கொள்வது நல்லது என சில மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால், இருவருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்து, நல்ல ரிலேஷன்ஷிப்பிற்கு வழி வகுக்கும்.

உடலுறவினால் ஏற்படும் நன்மைகள் போலவே பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. மன அழுத்தத்தை குறைக்கும் இதே உடலுறவு, சில சமயங்களில் அதை உருவாக்கவும் செய்யலாம். இது, சில சமயங்களில் நமக்கு முதுகு வலியையும் ஏற்படுத்தும். ஆண்களுக்கு அடிக்கடி விந்து வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளும் பெண்களுக்கு உச்ச நிலையை அடைய முடியாத சூழ்நிலையும் ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலுறவின் பின்விளைவாக கர்ப்பம் தரிக்கலாம். குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் இதை பெரும் பிரச்சனையாக பார்க்கின்றனர். 

Chella

Next Post

Jailer Audio Launch | ”குரைக்காத நாயும் இல்ல... குறை சொல்லாத வாயும் இல்ல”..!! விஜய்யை தாக்கி பேசிய ரஜினி..?

Sat Jul 29 , 2023
ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவுள்ளது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்றைய தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலகச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். குறிப்பாக இப்படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு ஜெயிலர் படம் பற்றி பேசினார்கள். அந்த வகையில் ரஜினிகாந்தும் […]

You May Like